மின் கட்டணம் தள்ளுபடி செய்யப்படாது.. அதை செலுத்த வேண்டும்.. மகாராஷ்டிரா அமைச்சர் உறுதி

 

மின் கட்டணம் தள்ளுபடி செய்யப்படாது.. அதை செலுத்த வேண்டும்.. மகாராஷ்டிரா அமைச்சர் உறுதி

மகாராஷ்டிராவில் மின் கட்டணம் தள்ளுபடி செய்யப்படாது, அதனை செலுத்த வேண்டும் என்று அம்மாநில மின்சார துறை அமைச்சர் நிதி ரவுத் தெரித்தார்.

மகாராஷ்டிராவில் கொரோனா மற்றும் புயலால் சாமானிய மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கபட்டுள்ளதால், மின் கட்டணத்தை அம்மாநில அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை என்று அம்மாநில மின்சார துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநில மின் விநியோகம் நிறுவனம் லிமிடெட் கூட்டு நிர்வாக இயக்குனர் அலுவலகத்தில் அம்மாநில மின்சார துறை அமைச்சர் நிதின் ரவுத் தலைமையில் ஆலோசனை கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது. அந்த கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் நிதின் ரவுத் கூறியதாவது:

மின் கட்டணம் தள்ளுபடி செய்யப்படாது.. அதை செலுத்த வேண்டும்.. மகாராஷ்டிரா அமைச்சர் உறுதி
நிதின் ரவுத்

மகாராஷ்டிராவில் மின்சார கட்டணம் தள்ளுபடி செய்யப்படாது, அதை செலுத்த வேண்டும். இந்த பணி மத்திய மற்றும் மாநில அரசுகளின் பணி. மத்திய அரசு முடிவு எடுக்கும் போதெல்லாம் மாநில அரசு அதனை ஆதரிக்கும். பின்னர் மக்களுக்கு நிவாரணம் வழங்க அது செயல்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், மகாராஷ்டிரா மாநில மின் விநியோகம் நிறுவனம் லிமிடெட், மின்சார சப்ளை சீராக இருக்க முன்னுரிமை அ ளிக்கும் அதேவேளையில், வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவை உறுதி செய்ய வேண்டும்.

மின் கட்டணம் தள்ளுபடி செய்யப்படாது.. அதை செலுத்த வேண்டும்.. மகாராஷ்டிரா அமைச்சர் உறுதி
மின் விநியோகம்

அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எந்தவித தாமதமும் இன்றி தடையற்ற மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய, எழக்கூடிய சிக்கல்களை கருத்தில் கொண்டு, உடனடி தீர்வு வழங்குவதற்கு தயாராவதில் இந்த அமைப்பு அதிக விழிப்புடன் இருக்க வேண்டும். வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்பட்ட புகார்களை உடனடியாக தீர்க்க வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவை வழங்குவது அமைப்பின் பொறுப்பாகும். எந்த அலட்சியத்தை பொறுத்து கொள்ள முடியாது. சகித்து கொள்ள முடியாது. மாதந்திர அடிப்படையில் பணி அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அமைச்சர் உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.