“திமுக கூட்டணியில் பிளவு ஏற்படும்” – அமைச்சர் செல்லூர் ராஜூ சொல்லும் தகவல்!

 

“திமுக கூட்டணியில் பிளவு ஏற்படும்” – அமைச்சர் செல்லூர் ராஜூ சொல்லும் தகவல்!

மக்கள் விரோத திட்டங்கள் திமுக -காங்கிரஸ் ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டன என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

“திமுக கூட்டணியில் பிளவு ஏற்படும்” – அமைச்சர் செல்லூர் ராஜூ சொல்லும் தகவல்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த கட்சிகள் தங்கள் கூட்டணியில் தான் இன்னும் உள்ளனர் என்று அதிமுக கூறி வருகிறது. திமுக கூட்டணியில் விசிக, மதிமுக , காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. இதில் தொகுதி பங்கீட்டில் 40 சீட்கள் ஒதுக்கினால் மட்டுமே கூட்டணி என தேமுதிக உறுதியாக சொல்ல, வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு அளிக்கும் கட்சியுடன் தான் கூட்டணி என பாமகவும் நிபந்தனை வைத்துள்ளது. இந்த சூழலில் திமுக – பாமகவுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே பாமக கூட்டணி அமைக்கும் கட்சியுடன் கூட்டணியில் இருக்க மாட்டோம் என்று திருமாவளவன் திட்டமிட்டபடி தெரிவித்துள்ள நிலையில், திமுக – பாமக கூட்டணி என்பது வெறும் யூகம் மட்டும் தான் என்று கூறியுள்ளார்.

“திமுக கூட்டணியில் பிளவு ஏற்படும்” – அமைச்சர் செல்லூர் ராஜூ சொல்லும் தகவல்!

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, ” திமுக கூட்டணியில் பிரச்னை வந்துவிட்டது. நிச்சயமாக பிளவு ஏற்படும். மக்கள் விரோத திட்டங்கள் திமுக- காங்கிரஸ் ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டன. எம்ஜிஆர் ஆட்சியில் இருக்கும்போது அவரை திட்டினார்கள். ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும்போது அவரை திட்டினார்கள். தற்போது திமுக ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்று நினைக்கிறார்கள். அழகிரியிடம் உள்ள ரவுடிகள் தற்போது ஸ்டாலினுடன் சேர்ந்து கொண்டார்கள். திமுகவுக்கு ரவுடிகளின் துணை தேவைப்படுகிறது. அதிமுகவில் அப்படி இல்லை; நாங்கள் ரவுடிகளை கிட்டகூட சேர்ப்பதில்லை” என்றார்.