போருக்கான தேவை இல்லை... ஈரானுக்கு எதிராக மூன்று ஐரோப்பிய நாடுகள் கூட்டறிக்கை! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News
  • February
    20
    Thursday

Main Area

Mainபோருக்கான தேவை இல்லை... ஈரானுக்கு எதிராக மூன்று ஐரோப்பிய நாடுகள் கூட்டறிக்கை!

அமெரிக்கா
அமெரிக்கா

போருக்கான அவசர தேவை இல்லை எனவே எல்லா தரப்பும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

iran

ஈராக் நாட்டுக்கு சென்ற ஈரான் ராணுவ தளபதி உள்ளிட்டவர்களை அமெரிக்க டிரோன் தாக்குதல் மூலம் கொலை செய்தது. இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் அறிவித்தது. அதன்படி இன்று காலை ஈராக்கில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதனால், எப்போது வேண்டுமானாலும் போர் ஏற்படக்கூடிய சூழல் நிலவுவதால் உலக நாடுகள் கவலை அடைந்துள்ளன.

france

போர் சூழலைத் தவிர்க்க பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி நாட்டுத் தலைவர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள், "போர் பதற்றத்தைத் தணிப்பதற்கான அவசர தேவை எழுந்துள்ளது. அனைத்து தரப்பினரும் பொறுப்புடனும் கட்டுப்பாட்டுடனும் செயல்படும்படி நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். ஈராக்கில் நிகழ்த்தப்பட்டு வரும் தொடர் வன்முறைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்" என்று கூறியிருந்தனர்.

iran

மேலும், அணுசக்தி ஒப்பந்தத்துடன் பொருந்தாத அனைத்து நடவடிக்கைகளையும் திரும்பப் பெற ஈரானை நாங்கள் வலியுறுத்துகிறோம். ஈராக் பிராந்தியத்தில் அமைதியை நிலைநிறுத்த எங்கள் பங்களிப்பை அளிக்க தயாராக உள்ளோம்" என்று கூறியுள்ளனர்.

iraq

ஈராக்கில் நடக்கும் தொடர் வன்முறைகள் மற்றும் அமெரிக்க ஆதரவு படைகள் மீது நடந்துவரும் தாக்குதல் அனைத்துக்கும் ஈரான் ராணுவ தளபதியாக இருந்த சுலைமானிதான் பின்னணியாக செயல்பட்டவர் என்று மேற்கத்திய நாடுகள் குற்றம்சாட்டுகின்றன. சுலைமானி மரணம் அடைந்துவிட்ட நிலையில், அணுசக்தி தொடர்பான ஆய்வில் ஈரான் பின்வாங்கினால் மட்டுமே போர் பதற்றம் தணியும் என்று கூறப்படுகிறது.

2018 TopTamilNews. All rights reserved.