இதைவிட தரக்குறைவான அரசியல் நாடகம் வேறில்லை .. அன்று ஸ்டாலின் சொன்னதை இன்று அவருக்கே திருப்பி சொல்லும் பாஜக

இதைவிட தரக்குறைவான அரசியல் நாடகம் வேறில்லை .. அன்று ஸ்டாலின் சொன்னதை இன்று அவருக்கே திருப்பி சொல்லும் பாஜக

அதிமுக ஆட்சியின் போது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் நினைச்சின்னம் அரசு பணத்தில் கட்டியபோது, அரசு செலவில் நினைவிடம், இதைவிட தரக்குறைவான- மலிவான- சுயநல அரசியல் நாடகம் வேறில்லை என்று கூறினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். இதை ஜனவரி மாதம் 27ம் தேதி அன்று தனது டுவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டிருந்தார்.

இதைவிட தரக்குறைவான அரசியல் நாடகம் வேறில்லை .. அன்று ஸ்டாலின் சொன்னதை இன்று அவருக்கே திருப்பி சொல்லும் பாஜக

இந்நிலையில், சென்னையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 39 கோடி ரூபாய் மதிப்பில் நினைவிடம் அமைக்கப்படும் என்று சட்டசபையில், 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். மேலும், கருணாநிதியின் வாழ்வின் சாதனைகளை, சிந்தனைகளை, மக்களும் வருங்கால தலைமுறையும் அறியக்கூடிய வகையில், நவீன விளக்கப் படங்களுடன் சென்னை காமராஜர் சாலை அண்ணாதுரை நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் 39 கோடி ரூபாய் மதிப்பில் நினைவிடம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதுகுறித்து தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், மு.க.ஸ்டாலின் அன்று சொன்னதையும் இன்று சொன்னதையும் ஒப்பிட்டு, கடுமையாக சாடியிருக்கிறார். அவர், ‘’மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு ரூ. 39 கோடியில் நினைவிடம் கட்ட மு.க.ஸ்டாலின் முடிவு அரசு பணத்தை இப்படி சமாதியில் கொட்டுவது ஞாயமா?

இதைவிட தரக்குறைவான அரசியல் நாடகம் வேறில்லை .. அன்று ஸ்டாலின் சொன்னதை இன்று அவருக்கே திருப்பி சொல்லும் பாஜக

இதை கேட்டால் அநியாயம் என்பார்கள் உபிஸ்.. ஆனால் “ஜெ”வுக்கு அதிமுக சமாதி கட்டியதற்கு ஸ்டாலின் தெரிவித்த எதிர்ப்பு படியுங்கள்’’ என்று சொல்லிவிட்டு,ஸ்டாலின் அன்று சொன்னதை டுவிட்டரில் ஷேர் செய்திருக்கிறார் சேகர்.