மதுரையிலும் நாளைய ஊரடங்கில் தளர்வுகள் கிடையாது! – கடைசி நேர அறிவிப்பால் மக்கள் அதிருப்தி

 

மதுரையிலும் நாளைய ஊரடங்கில் தளர்வுகள் கிடையாது! – கடைசி நேர அறிவிப்பால் மக்கள் அதிருப்தி

மதுரையில் நாளை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்திருப்பது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கடந்த வாரமே முழு ஊரடங்கு அமலுக்கு வந்துவிட்டது. அதிலும் ஞாயிற்றுக் கிழமைகளில் தளர்வுகளற்ற ஊரடங்கு இருக்கும். பால், மருந்துக்கடைகள் மட்டுமே திறந்திருக்கும். காய்கறி, மளிகைக் கடைகள், பெட்ரோல் பங்க் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
மதுரை, தேனியில் இந்த வாரம்தான் முழு ஊரடங்கு கொண்டுவரப்பட்டது.

மதுரையிலும் நாளைய ஊரடங்கில் தளர்வுகள் கிடையாது! – கடைசி நேர அறிவிப்பால் மக்கள் அதிருப்தி

அத்தியாவசிய பொருட்கள் விற்பனை காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இருக்கும் என்று கூறப்பட்டது. சென்னையைப் போலவே ஞாயிற்றுக் கிழமைகளில் தளர்வு இருக்காது என்று மக்கள் கருதினர். ஆனால், இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லாததால் மக்கள் சற்று குழப்பத்திலிருந்தனர்.
தற்போது நாளை எந்த தளர்வுமின்றி ஊரடங்கு அமல்படுத்தப்படும். பேருந்துகள், இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடைகள், வணிக நிறுவனங்கள் முழுவதுமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வெளியே நடமாடுவதைத் தவிர்க்க மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மருத்துவ அவசர நிலை உள்ளிட்ட காரணங்களுக்காக வெளியே செல்வதில் தடை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.