கராச்சி பங்குச் சந்தை தீவிரவாத தாக்குதலின் பின்னணியில் இந்தியா… வாய் கூசாமல் பேசிய இம்ரான் கான்

கராச்சி பங்குச் சந்தை தீவிரவாத தாக்குதலின் பின்னணியில் இந்தியா… வாய் கூசாமல் பேசிய இம்ரான் கான்

பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள பங்குச் சந்தை தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து அந்நாட்டு பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகள் 4 பேரையும் சுட்டு கொன்றனர். இந்த தாக்குதலில் 4 தீவிரவாதிகள், 4 பாதுகாவலர்கள், ஒரு போலீஸ் மற்றும் ஒரு சாமானிய மனிதர் உள்பட மொத்தம் 10 பேர் இறந்தனர். பலூச்சிஸ்தான் தென்மேற்கு மாகாணத்தை சேர்ந்த தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான பலூச் விடுதலை ராணுவம் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.

கராச்சி பங்குச் சந்தை தீவிரவாத தாக்குதலின் பின்னணியில் இந்தியா… வாய் கூசாமல் பேசிய இம்ரான் கான்

இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பங்குச் சந்தை தாக்குதல் தொடர்பாக பேசுகையில், இந்த தாக்குதலின் பின்னணியில் இந்தியா உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பாகிஸ்தான் பங்குச் சந்தை பகுதிக்குள் நுழைவதற்கு முன்பே 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இது பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த பெரிய வெற்றி என தெரிவித்தார்.

கராச்சி பங்குச் சந்தை தீவிரவாத தாக்குதலின் பின்னணியில் இந்தியா… வாய் கூசாமல் பேசிய இம்ரான் கான்

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி நேற்று முன்தினம் கராச்சி பங்குச் சந்தை தாக்குதலுக்கு இந்தியாதான் காரணம் என குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், பாகிஸ்தான் போல் அல்லாமல் கராச்சி உள்பட உலகின் எந்தவொரு பகுதியில் தீவிரவாத தாக்குதல் நடந்தாலும் அதனை கண்டிக்க இந்தியா தயங்கியது இல்லை என பதிலடி கொடுத்தது. இதனையடுத்து நேற்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பங்குச் சந்தை தாக்குதலுக்கு இந்தியாதான் காரணம் என குற்றச்சாட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.