சம்பளத்தில் ஆண் பெண் வித்தியாசம் இல்லை – இருநாட்டு விளையாட்டு துறையில் அதிரடி

சம்பளத்தில் ஆண் பெண் வித்தியாசம் இல்லை – இருநாட்டு விளையாட்டு துறையில் அதிரடி

இந்த உலகம் உருவானது இயற்கையால் என்றாலும்கூட ஆண்கள் சொகுசாக வாழ்வதற்காக மாற்றி அமைக்கப்பட்டது என்று சொல்வார்கள். சற்று யோசித்தால் அதுதான் உண்மை என்றும் புலப்படும். ஒரு வேலையைச் செய்யும் ஆணுக்கு ஒரு சம்பளம், அதே வேலையைச் செய்யும் பெண்ணுக்கு அதைவிட குறைவான சம்பளம்.

இதற்கு எதிராகப் பல போராட்டங்கள் இலகில் நடந்திருக்கின்றன. பல மாற்றங்களும் நடந்திருக்கின்றன. பல இடங்களில் பல வேலைகளில் ஆண்களுக்கு கொடுக்கப்படும் சம்பளமே அதே வேலையைச் செய்யும் பெண்களுக்கு வழங்கப்படுகிறது.

சம்பளத்தில் ஆண் பெண் வித்தியாசம் இல்லை – இருநாட்டு விளையாட்டு துறையில் அதிரடி

ஊதியத்தில் பால் பேத வேறுபாடு என்பது விளையாட்டுத் துறையிலும் இருக்கவே செய்கிறது. ஆண்கள் கிரிக்கெட்டில் ஆடும் ஒரு வீரருக்கு வழங்கப்படும் சம்பளம், விளம்பரத்தில் நடிக்கும் ஊதியம் போன்றவற்றிற்கு இணையாக பெண்கள் கிரிக்கெட்டில் ஆடும் ஒரு வீரருக்கு அளிக்கப்படுவதில்லை.

இந்த வேறுபாட்டை பிரேசில் கால்பந்து அமைப்பு மாற்றி அமைத்திருக்கிறது. ஆம், பிரேசில் நாட்டு கால்பந்து விளையாட்டு வீரர்களின் சம்பளம் இனி ஆண் பெண் எனும் பால் பேதமின்றி நிர்ணயிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது பிரேசில் நாட்டு கால்பந்து அமைப்பு.

சம்பளத்தில் ஆண் பெண் வித்தியாசம் இல்லை – இருநாட்டு விளையாட்டு துறையில் அதிரடி

இதனை கால்பந்து ரசிகர்களும் விமர்சகர்களும் பாராட்டி வரவேற்று வருகின்றன. உடனே, இந்தச் செய்தியின் எதிரொலி இன்னோர் இடத்திலும் ஒலித்துவிட்டது. இங்கிலாந்து கால்பந்து சங்கமும் தங்கள் நாட்டு தேசிய அணியில் ஆடும் வீரர்கள் எவருக்கும் அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஒரே விகிதத்தில் ஊதியம் நிர்ணயம் செய்கிறோம் என்றும், இந்த நடைமுறையை இந்த ஆண்டின் தொடக்கம் முதலே நடைமுறைப் படுத்தி வருவதாகவும் தெரிவித்திருக்கிறது.

சம்பளத்தில் ஆண் பெண் வித்தியாசம் இல்லை – இருநாட்டு விளையாட்டு துறையில் அதிரடி

நல்லதொரு தொடக்கம் இது. அனைத்து நாட்டு விளையாடு அமைப்புகளும் அனைத்து வகை விளையாட்டுகளுக்கும் ஊதியம் முடிவு செய்கையில் அதில் பாலினப் பேதம் காட்டாது இருக்க இது ஓர் உதாரணமாக அமையும் என நம்புவோம்.