கோயம்பேடு சந்தையை தற்போது திறக்க வாய்ப்பு இல்லை – சிஎம்டிஏ தகவல்!

 

கோயம்பேடு சந்தையை தற்போது திறக்க வாய்ப்பு இல்லை – சிஎம்டிஏ தகவல்!

சென்னையில் குறைவாகவே இருந்த கொரோனா வைரஸ் பாதிப்பு, கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா பரவியதன் காரணமாக பெருந்தொற்றாக உருவெடுத்தது. கோயம்பேடு வியாபாரிகள் மூலம் சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்தது. கோயம்பேடு சந்தை வியாபாரிகள் மூலமாக மற்ற வியாபாரிகள், பொதுமக்கள், காய்கறி இறக்குமதி செய்ய வந்தவர்கள் என பன்மடங்காக பாதிப்பு அதிகரித்தது. இதனால் அந்த சந்தை மூடப்பட்டு திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தை தொடங்கப்பட்டது. மேலும், பழ மார்க்கெட் மாதாவர சந்தைக்கு மாற்றப்பட்டது.

கோயம்பேடு சந்தையை தற்போது திறக்க வாய்ப்பு இல்லை – சிஎம்டிஏ தகவல்!

கோயம்பேடு சந்தையில் கொரோனா பரவியதில் இருந்து கோயம்பேடு சந்தை மூடப்பட்டிருக்கும் நிலையில், அதனை மீண்டும் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. அதாவது, மூன்றடுக்கு உயர் ரக கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரங்கள் மூலம் மார்க்கெட் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஒப்புதல் அளித்த பின் மார்க்கெட் திறக்கப்படும் என்று கூறப்பட்டது.

கோயம்பேடு சந்தையை தற்போது திறக்க வாய்ப்பு இல்லை – சிஎம்டிஏ தகவல்!

இந்நிலையில் கோயம்பேடு சந்தையை தற்போதைக்கு திறக்க இயலாது என்று சிஎம்டிஏ உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சென்னையில், கொரோனா அதிகமாக பரவுவதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.