கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வுகள் ரத்து இல்லை; தேர்வின்றி பட்டம் வழங்கக்கூடாது!

கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வுகள் ரத்து இல்லை; தேர்வின்றி பட்டம் வழங்கக்கூடாது!

கொரோனா காரணமாக பொறியியல், தொழில்கல்வி உள்ளிட்ட அனைத்து பட்டப்படிப்புகள் தேர்வை ரத்து செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது. அதனால் முதலாம், இரண்டாம் ஆண்டு கலை, அறிவியல் இளங்கலை படிப்புகளுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.

கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வுகள் ரத்து இல்லை; தேர்வின்றி பட்டம் வழங்கக்கூடாது!

மேலும் இறுதியாண்டு மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இறுதியாண்டு தேர்வு கட்டாயமாக்கப்பட்டதை எதிர்த்து 31 மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். 

கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வுகள் ரத்து இல்லை; தேர்வின்றி பட்டம் வழங்கக்கூடாது!

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்த தடையில்லை என்றும் இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்தாமல் கல்லூரி மாணவர்களுக்கு மாநில அரசு பட்டம் வழங்கக்கூடாது என்றும் தீர்ப்பளித்துள்ளது. கொரோனா காலத்தினால் கல்லூரி இறுதித் தேர்வை தள்ளி வைக்கலாம் என்று கூறி பல்கலைக்கழக மானியக்குழு அறிவிக்கைக்கு எதிராக கல்லூரி மாணவர்கள் தொடர்ந்த வழக்கையும் தள்ளுபடி செய்தனர்.