‘விதிகளை மீறிய கட்சிகள்’ தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்கு தடையா?

 

‘விதிகளை மீறிய  கட்சிகள்’ தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்கு  தடையா?

தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த பல மாதங்களாக 300ற்கும் கீழ் குறைவாக இருந்த பாதிப்பு தற்போது ஆயிரத்தை தண்டியுள்ளது. குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு கொரோனா வேகமாக பரவியதால் மீண்டும் 9 முதல் 11 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அத்துடன் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறை கூறி வருகிறது. இன்று கூட சென்னையில் ஒரே நிறுவனத்தை சேர்ந்த 40 பேருக்கு தொற்று உறுதியானதால் அச்சம் அதிகரித்துள்ளது. அதேசமயம் தேர்தல் நெருங்கி வருவதால் பிரச்சாரமும் சூடு பிடித்துள்ளது. இதனால் தொற்று வேகமாக பரவும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

‘விதிகளை மீறிய  கட்சிகள்’ தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்கு  தடையா?

மதுரையை சேர்ந்த ஜலாவுத்தீன் என்பவர் தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வருகிறது. இதனால் தேர்தல் பிரச்சாரங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கொரோனா பரவல் தடுப்பு விதிகளை அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் உறுதிபடுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் முகக்கவசம், தனிமனித இடைவெளி போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்றும் கூறியது. தற்போது தேர்தல் பணிகள் நடைபெற்று வருவதால் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள தடையில்லை என்று கூறி வழக்கை முடித்து வைத்தது .

‘விதிகளை மீறிய  கட்சிகள்’ தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்கு  தடையா?

இதேபோல் சமீபகாலமாக தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வருகிறது என்பதை சுட்டிக்காட்டியுள்ள உயர்நீதிமன்ற கிளை, அரசியல் கட்சி பிரச்சாரக் கூட்டங்கள் ,பொதுமக்கள் கூடும் இடங்களில் கொரோனா விதிகள் பின்பற்றப்படுவதில்லை.அனைத்து அரசியல் கட்சிகளும் பாகுபாடு இன்றி முறையாக கொரோனா வழிகாட்டு முறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளது.