அதிமுகவில் தற்போது காலியிடம் இல்லை…மாஃபா தடாலடி

 

அதிமுகவில் தற்போது காலியிடம் இல்லை…மாஃபா தடாலடி

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று உரிமைக்குரல் முழக்க போராட்டம் நடத்தியது அதிமுக. கட்சி நிர்வாகிகள் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டு முன்பாக நின்று திமுகவை கண்டித்து பதாகைகள் ஏந்தி முழக்கம் எழுப்பினர்.

அதிமுகவில் தற்போது காலியிடம் இல்லை…மாஃபா தடாலடி

போடியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், சேலத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் தங்கள் வீட்டு முன்பாக நின்று பதாகைகள் ஏந்தி முழக்கமிட்டனர்.

முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தனது இல்லத்தின் முன்பு நின்று பதாகையை ஏந்தி திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தார். அவருடன் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் பங்கேற்றனர்.

அதிமுகவில் தற்போது காலியிடம் இல்லை…மாஃபா தடாலடி

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, அதிமுகவை மீட்டெடுக்க சசிகலா அதிமுகவிற்கு வருவதாக சொல்லி வருவது குறித்த கேள்விக்கு, கட்சியை மீட்டெடுக்க வேண்டும் என்ற சசிகலாவின் வார்த்தை தேவையற்றது. இபிஎஸ்- ஓபிஎஸ் இருவரும் இணைந்து நல்ல மீட்டுருவாக்கம் செய்துள்ளனர் என்று தெரிவித்தார். அவர் மேலும், அதிமுகவில் தற்போது காலியிடம் இல்லை. சசிகலா ஒருவேளை அதிமுகவில் இணைய வேண்டும் என்றால் இபிஎஸ் – ஓபிஎஸ் இருவரையும் சந்தித்து பேச வேண்டும் என்று தெரிவித்தார்.

அதிமுகவில் இணையப் போகிறேன். அதிமுகவை வழிநடத்த போகிறேன் என்று தொண்டர்களிடம் தொடர்ந்து பேசி அந்த ஆடியோக்களை வெளியிட்டுவ வருகிறார் சசிகலா. இந்நிலையில் அதிமுகவில் இணைய வேண்டுமென்றால் ஓபிஎஸ்- இபிஎஸ் இருவரையும் சந்தித்து பேசவேண்டும் என்று அதிரடியாக தெரிவித்துள்ளார் மாஃபா.