லக்ஷ்மி விலாஸ் பேங்க் விவகாரம்… மிகப்பெரிய ஊழல் நடந்திருக்க வாய்ப்பு..! அதிரடி காட்டும் சுப்ரமண்ய சாமி.!?

லக்ஷ்மி விலாஸ் பேங்க் விவகாரம்… மிகப்பெரிய ஊழல் நடந்திருக்க வாய்ப்பு..! அதிரடி காட்டும் சுப்ரமண்ய சாமி.!?

லஷ்மி விலாஸ் வங்கி – டிபிஎஸ் வங்கி இணைப்பு விவகாரத்தில், மிகப்பெரிய ஊழல் நடந்திருக்க வாய்ப்புள்ளது என சுப்பிரமணியன் சுவாமி பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். இந்த விவகாரத்தில், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் மீது சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் சுப்ரமணியன் சுவாமி வலியுறுத்தி உள்ளார்.

லக்ஷ்மி விலாஸ் பேங்க் விவகாரம்… மிகப்பெரிய ஊழல் நடந்திருக்க வாய்ப்பு..! அதிரடி காட்டும் சுப்ரமண்ய சாமி.!?

வாராக்கடன் சிக்கல் காரணமாக, லெஷ்மி விலாஸ் வங்கியின் நிதிநிலை மோசமானதால், அந்த வங்கி மீது ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்தது. அதன்பின்னர் சில நாட்களில் லெஷ்மி விலாஸ் வங்கியை சிங்கப்பூரை சேர்ந்த டிபிஎஸ் வங்கியுடன் இணைக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.தற்போது, சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ள குற்றச்சாட்டில், இந்த இணைப்பை உடனடியாக மத்திய அரசு தணிக்கை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு மூன்று பக்க கடிதத்தையும் சுப்பிரமணியன் சுவாமி எழுதியுள்ளார்.

72 மணி நேரத்தில் அனுமதி!

லக்ஷ்மி விலாஸ் பேங்க் விவகாரம்… மிகப்பெரிய ஊழல் நடந்திருக்க வாய்ப்பு..! அதிரடி காட்டும் சுப்ரமண்ய சாமி.!?

லஷ்மி விலாஸ் வங்கியின் இயக்குனர்கள் 72 மணி நேரத்தில் டிபிஎஸ் வங்கியுடன் இணைப்பதற்கு அனுமதி அளித்துள்ளனர். இவ்வளவு வேகமாக ஒரு வங்கியை இணைக்கும் முடிவில், நிதி மோசடி நடந்திருக்க வாய்ப்புள்ளதாக தனது சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த இணைப்பில், சிங்கப்பூர் வங்கி நிதி மோசடியில் ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க செய்தி நிறுவனங்கள் சந்தேகங்களை வெளிப்படுத்தியுள்ளன என்றும் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

லக்ஷ்மி விலாஸ் பேங்க் விவகாரம்… மிகப்பெரிய ஊழல் நடந்திருக்க வாய்ப்பு..! அதிரடி காட்டும் சுப்ரமண்ய சாமி.!?

டிபிஎஸ் வங்கியை விட, லட்சுமி விலாஸ் வங்கி 20 மடங்கு பெரிய வங்கியாகும். லெஷ்மி விலாஸ் வங்கிக்கு இந்தியா முழுவதும் 550 கிளைகள் உள்ளன. அந்த வங்கியின் தொழில் நடவடிக்கைகளை நவம்பர் 17ஆம் தேதி ரிசர்வ் வங்கி முடக்கியது. இதையடுத்து நிர்வாக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில், டிபிஎஸ் வங்கியுடன் 20 ஆம் தேதி இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்படி வங்கியின் சொத்துகளை 72 மணி நேரத்துக்குள் மாற்றியதில் நிதி மோசடி நடந்திருக்க வாய்ப்பு உள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. வங்கிகள் மொத்த சொத்துகளும் டிபிஎஸ் வங்கிக்கு மாற்றப்பட்டுள்ளன. வங்கியின் மொத்த பத்திரங்களும், பங்குகளும், டிபிஎஸ் வங்கிக்கு மாற்றப்பட்டதில் அழுத்தமான சந்தேகம் எழுந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

சக்திகாந்த தாஸை விசாரிக்க வேண்டும்!

லக்ஷ்மி விலாஸ் பேங்க் விவகாரம்… மிகப்பெரிய ஊழல் நடந்திருக்க வாய்ப்பு..! அதிரடி காட்டும் சுப்ரமண்ய சாமி.!?

இந்த இணைப்புக்கு, லஷ்மி விலாஸ் வங்கியின் அனைத்து இயக்குனர்களும் 72 மணி நேரத்தில் ஒப்புதல் அளித்துள்ளனர். அதுபோல ரிசர்வ் வங்கியும் உடனடியாக அனுமதி அளித்துள்ளது. பங்குதாரர்கள் மற்றும் பத்திர உரிமையாளர்களுக்கு உரிய கால அவகாசத்தை ரிசர்வ் வங்கி அளிக்கவில்லை. எனவே இந்த விவகாரத்தில், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் உள்பட அதிகாரிகளையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். நவம்பர் 20ஆம் தேதி, வேலை நேரத்துக்கு பின்னர் லெஷ்மி விலாஸ் வங்கி நடவடிக்கைகள் முடக்கப்பட்டன. அதையடுத்து 20 ஆம் தேதியே வங்கியை உரிமை மாற்றம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை மோசடிபோல, பங்குதாரர்களின் விருப்பத்தை புறக்கணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

லக்ஷ்மி விலாஸ் பேங்க் விவகாரம்… மிகப்பெரிய ஊழல் நடந்திருக்க வாய்ப்பு..! அதிரடி காட்டும் சுப்ரமண்ய சாமி.!?

ஆத்ம நிர்பார் என உள்நாட்டு தொழில்துறை நடவடிக்கைகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கும் நிலையில், இந்தியாவை சேர்ந்த ஒரு வங்கியை, இந்திய பொதுத்துறை வங்கியுடன் இணைப்பதற்கு பதிலாக வெளிநாட்டு வங்கியுடன் இணைக்கப்பட்டது தவறு எனவும் குற்றம் சாட்டியுள்ளார். டிபிஎஸ் வங்கியில் பெரும்பான்மையான பங்குதாரர்கள் பல்வேறு நாடுகளில் உள்ள இஸ்லாமிக் வங்கியோடு தொடர்புடையவர்கள். அவர்கள் மீது பல்வேறு நாடுகளில் நிதி மோசடி புகார்கள் உள்ளன என்றும் சுப்பிரமணிய சுவாமி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக சக்திகாந்த தாஸ் மீது, சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும், ரிசர்வ் வங்கியின் இயக்குர் குழு மற்றும் ஆலோசனை குழுக்களை சீரமைக்க வேண்டும் என்றும் சுப்ரமணியன் சுவாமி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் .