சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இன்று கொரோனா உயிரிழப்பு இல்லை

 

சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இன்று கொரோனா உயிரிழப்பு இல்லை

தமிழகத்தில் படிப்படியாக கொரோனா பாதிப்பு குறைந்துவருகிறது. அதற்கு ஒருபுறம் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டதுதான் காரணம் என்றாலும், மறுபுறம் தமிழக அரசின் தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகளே காரணம். இன்று தமிழகத்தில் 2,775 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கோயம்புத்தூரில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 298 ஆக அதிகரித்துள்ளது. இதற்கு அடுத்தப்படியாக தஞ்சையில் 210 பேருக்கும், கள்ளக்குறிச்சியில் 198 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் இன்று 3,188 பேஷன்ட்ஸ் டிஸ்சார்ஜ் 47 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இன்று கொரோனா உயிரிழப்பு இல்லை

இந்நிலையில் சென்னையில் 171பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், இன்று யாரும் கொரோனா தொற்றால் உயிரிழக்கவில்லை. இதேபோல் தமிழகத்தில் உள்ள 20 மாவட்டங்களிலும் புதிதாக யாரும் உயிரிழக்கவில்லை. அரியலூர், செங்கல்பட்டு, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கரூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று யாரும் உயிரிழக்கவில்லை.

இதேபோல் சிவகங்கை, தென்காசி, தேனி, திருப்பத்தூர், தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், விருதுநகர், மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டையிலும் இன்று கொரோனா உயிரிழப்பு பதிவாகவில்லை.