தென்காசி விவசாயி மரணம்; உடலை உடற்கூராய்வு செய்யக்கோரிய வழக்கு ஒத்திவைப்பு

 

தென்காசி விவசாயி மரணம்; உடலை உடற்கூராய்வு செய்யக்கோரிய வழக்கு ஒத்திவைப்பு

தென்காசி மாவட்டம் கடையத்தை அடுத்த வாகைகுளத்தை சேர்ந்த அணைக்கரைமுத்து (76) என்பவர், தன் தோட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக மின்வேலி அமைத்து இருப்பதாக புகார் எழுந்தது. இதனால் அவரை விசாரிக்க, கடையம் வன சரக அதிகாரிகள் அழைத்து சென்றுள்ளனர். அப்போது முத்து மின்வேலி அமைத்ததை ஒப்புக்கொண்டு, அபராதம் செலுத்த சம்மதித்ததாக தெரிகிறது. விசாரணையின் போது அதிகாரிகளிடம் முத்து நெஞ்சு வலிப்பதாக கூறியதால் அவர் உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், அவர் அங்கு உயிரிழந்துள்ளார்.

தென்காசி விவசாயி மரணம்; உடலை உடற்கூராய்வு செய்யக்கோரிய வழக்கு ஒத்திவைப்பு

ஆனால் இதனை ஏற்றுக் கொள்ளாத முத்துவின் குடும்பத்தினர், வனத்துறை அதிகாரிகள் விசாரணையில் அவரை தாக்கியதால் தான் உயிரிழந்ததாக புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே முத்து மரண விவகாரத்தில் மூத்த தடயவியல் மருத்துவர்கள் உடற்கூராய்வு செய்யக்கோரி முத்துவின் மனைவி பாலம்மாள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். மேலும், வனத்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் வனத்துறையினர் தாக்கியதால் தான் அவர் உயிரிழந்ததாகவும் அவர் கூறியிருந்தார். இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் , அரசு தரப்பினல் அவகாசம் கோரப்பட்டது. இதனையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதிகள் நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.