கொட்டகை அமைத்து உடலை எரிக்கும் கிராமத்தினர் – மயான வசதி ஏற்படுத்த கோரிக்கை

கொட்டகை அமைத்து உடலை எரிக்கும் கிராமத்தினர் – மயான வசதி ஏற்படுத்த கோரிக்கை

ஆண்டிப்பட்டி அருகே, மாலைப்பட்டி கிராமத்தில், மயான வசதி இல்லாமல் தற்காலிக கொட்டகை அமைத்து உடலை எரிக்கும் அவல நிலை உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி வட்டம், கோவில்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் மாலைப்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில், அவர்களுக்கு என தனியாக மயான வசதியில்லை.

கொட்டகை அமைத்து உடலை எரிக்கும் கிராமத்தினர் – மயான வசதி ஏற்படுத்த கோரிக்கை

இந்த நிலையில், தேனி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால், கிராமங்களில் மழை நீர் சூழ்ந்து, சகதியாக காணப்படுகிறது.
இதற்கிடையே மாலைபட்டி கிராமத்தில் மூதாட்டி ஒருவர் இறந்த நிலையில், அவருடைய உடலை அப்பகுதியில் உள்ள பொது இடத்தில் வைத்து எரியூட்டும் பணிகள் நடைபெற்றன. அப்போது, திடீரென மழை பெய்யத் தொடங்கியதால், உடலை எரிக்கும் பணிகள் தடைபட்டன. இதையடுத்து, தற்காலிகமாக தகர கூடாரம் அமைத்து, மூதாட்டியின் உடல் எரியூட்டப்பட்டது. இது தொடர்பாக கூறிய கிராம மக்கள், கிராமத்துக்கு எரியூட்டும் கொட்டகை அமைத்து தர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொட்டகை அமைத்து உடலை எரிக்கும் கிராமத்தினர் – மயான வசதி ஏற்படுத்த கோரிக்கை