9 மாதங்களுக்கு பின் திறக்கப்பட்ட வைகை அணை பூங்கா- சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

9 மாதங்களுக்கு பின் திறக்கப்பட்ட வைகை அணை பூங்கா- சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

தேனி

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக மூடப்பட்டிருந்த வைகை அணை பூங்கா, 9 மாதங்களுக்கு பிறகு இன்று சுற்றுலா பயணிகள் பார்வைக்காக திறக்கப்பட்டது.தேனி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் வைகை அணை பூங்காவும் ஒன்று. இங்கு வைகை அணையின் வலது மற்றும் இடதுபுற கரைகளில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக சிறுவர் பூங்கா, மலர் பூங்கா, நீர் சருக்கல் விளையாட்டு, களங்கரை விளக்கம் என ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்துள்ளன.

9 மாதங்களுக்கு பின் திறக்கப்பட்ட வைகை அணை பூங்கா- சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

இதனால் தமிழகம் மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வருகை தருவர். இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் வைகை அணை பூங்காவில் பொதுமக்கள் பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது அமலில் உள்ள கொரோனா தளர்வுகள் காரணமாக வைகை அணை பூங்காவில் கட்டுப்பாடுகளுடன் பொதுமக்களை அனுமதிக்க, சமீபத்தில் தேனி மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது.

9 மாதங்களுக்கு பின் திறக்கப்பட்ட வைகை அணை பூங்கா- சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

இதனை தொடர்ந்து, 9 மாதங்களுக்கு பிறகு இன்று வைகை அணை பூங்கா பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது. இதனையொட்டி, முக கவசம் அணிந்து வந்த சுற்றுலா பயணிகளுக்கு, பூங்கா ஊழியர்கள் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொண்டு, பூங்காவிற்குள் அனுமதித்தனர்.