தேனி: பெரியகுளம் நகராட்சியில் நாளை மாலை 5 மணி வரை முழு முடக்கம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சென்னையில் தான் அதிக அளவு கொரோனா தொற்று பரவியிருக்கிறது. இதனால் தலைநகரான சென்னையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இருப்பினும் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு மீண்டும் முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு சென்ற மக்களால் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.


இந்நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட 30 வார்டுகளிலும் நாளை மாலை 5 மணி முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டீக்கடைகள் திறக்க அனுமதி இல்லை, காய்கறி கடைகள் பழக்கடைகள் அத்தியாவசிய மளிகை பொருட்கள் அனைத்துமே டோர் டெலிவரி மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து பேருந்து, தனியார் பேருந்து, ஆட்டோ, கார், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் பெரியகுளம் பகுதியில் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடைகளை மீறுவோர் மீது காவல்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்கும் என பெரியகுளம் நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Most Popular

ரூ.1.10 கோடி லஞ்சம் வாங்கிய தாசில்தார் கையும் களவுமாக பிடிபட்டார்!! (வீடியோ)

தெலங்கானாவில் ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தாசில்தாரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர். மல்காஜிரி மாவட்டத்தில் உள்ள கீசாரா மண்டலத்தில், ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றிற்கு...

குடும்பத்தினருடன் உங்கள் 2 ஆவது இன்னிங்சை தொடங்க தோனிக்கு சச்சின் வாழ்த்து!

ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்திருந்தார். அதன்பின் டி20மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டும் தோனி தொடர்ந்து விளையாடி வந்தார். இந்நிலையில் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தோனி...

ஜோ பிடன் அதிபரானால் அமெரிக்கா பாதுகாப்பற்ற நாடாகிவிடும்: அதிபர் ட்ரம்ப்

ஜோபிடன் அதிபரானால் அமெரிக்காவில் எவரும் பாதுகாப்பாக இருக்க முடியாது என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விமர்சனம் செய்துள்ளார். அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசு...

தடுப்பு மருந்து உற்பத்தியை தொடங்கியது ரஷ்யா!

ரஷ்யா அறிமுகம் செய்த கொரோனா தடுப்பு மருந்தான 'ஸ்புட்னிக் v' இன் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொரோனா தடுப்பு மருந்தினை அறிமுகம் செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் உலக நாடுகளிடையே...
Do NOT follow this link or you will be banned from the site!