“அரசியலில் பெண்கள், இளைஞர்களுக்கு வழிகொடுத்தால் நாடு முன்னேறும்” – கமல்ஹாசன்

“அரசியலில் பெண்கள், இளைஞர்களுக்கு வழிகொடுத்தால் நாடு முன்னேறும்” – கமல்ஹாசன்

தேனி

அரசியலில் பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் வழிகொடுத்தால் நாடு முன்னேற்றம் அடையும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலையொட்டி நேற்று மதுரையில் முதற்கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய கமல்ஹாசன், 2ஆம் நாளான இன்று தேனி மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.

“அரசியலில் பெண்கள், இளைஞர்களுக்கு வழிகொடுத்தால் நாடு முன்னேறும்” – கமல்ஹாசன்

அப்போது, தேனியில் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து பேசிய அவர், தமிழகத்தில் ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளதாகவும், இதனால் பெண்கள் நினைத்தால் ஆட்சியில் யார் அமர வேண்டும் என்பதை தீர்மானிக்க முடியும் என்றும் தெரிவித்தார். மற்ற கட்சிகளை போல இல்லாமல், மக்கள் நீதி மய்யத்தில் பெண்கள் ஒரு அங்கமாக விளங்குவதாகவும் தெரிவித்தார்.

“அரசியலில் பெண்கள், இளைஞர்களுக்கு வழிகொடுத்தால் நாடு முன்னேறும்” – கமல்ஹாசன்

தொடர்ந்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பெண்கள் இரண்டரை ஆண்டுகள் காலம் ஆட்சி செய்ய வேண்டுமென கூறியதை குறிப்பிட்டு பேசிய அவர், அரசியலில் பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் வழி கொடுத்தால் நாடு முன்னேறும் என்றும் ஆனால் இங்கு அப்பா எம்எல்ஏ ஆகவும், மகன் எம்.பி. ஆகவும் இருக்கும் நிலையில் எப்படி பெண்களுக்கு வழி கொடுப்பார்கள்? என்றும் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய கமல்ஹாசன், கட்சிக் கூட்டத்திலேயே குப்பைகளை கிளீன் செய்யும் நாங்கள், அரசியலுக்கு வந்தால் அரசியலில் உள்ள குப்பைகளையும் சுத்தம் செய்வோம் என்று கூறினார்.