கிசான் திட்ட முறைகேடு: தேனி மாவட்டத்தில் ரூ.25 கோடி வசூல்!

 

கிசான் திட்ட முறைகேடு: தேனி மாவட்டத்தில் ரூ.25 கோடி வசூல்!

தேனி மாவட்டத்தில் கிசான் திட்டத்தில் முறைகேடு செய்தவர்களிடம் இருந்து ரூ.25 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு சிறு,குறு கடன் வழங்கும் திட்டமான கிசான் திட்டத்தில் நாடு முழுவதிலும் லட்ச கணக்கான மக்கள் பயன்பெற்றுள்ளனர். இந்த திட்டம் தொடர்பான கணக்கெடுப்பின் போது, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மோசடி நடந்திருப்பது அம்பலமானது. இதனையடுத்து அதிரடியாக சோதனை நடத்திய அதிகாரிகள் கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் முறைகேடு நடந்திருப்பதை கண்டுபிடித்தனர்.

கிசான் திட்ட முறைகேடு: தேனி மாவட்டத்தில் ரூ.25 கோடி வசூல்!

இதனையடுத்து முறைகேடு செய்த நபர்களின் வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை திரும்பப்பெறுமாறு அரசு உத்தரவிட்டதன் பேரில், பணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் ரூ. 11.30 கோடி வசூல்கப்பட்டிருப்பதாகவும் விழுப்புரத்தில் ரூ.7 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் கிசான் திட்டத்தில் முறைகேடு செய்த 1,087 பயனாளிகளிடம் இருந்து ரூ.25 லட்சம் வசூலிக்கப்பட்டிருப்பதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.