பள்ளி முன்பு பழுதாகி நிற்கும் மின்கம்பம்- அச்சத்தில் கிராம மக்கள்

 

பள்ளி முன்பு பழுதாகி நிற்கும் மின்கம்பம்- அச்சத்தில் கிராம மக்கள்

தேனி

தேனி மாவட்டத்தில் அரசுப்பள்ளி முன்பு பழுதடைந்து நிலையில் காணப்படும் மின்கம்பத்தை அகற்ற, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அடுத்த கோம்பைத்தொழு ஊராட்சியில் காமன்கல்லூர் மலை கிராமம் உள்ளது.இந்த பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப் பள்ளியில் 200-க்கு மேற்பட்ட மாணவ, மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளியின் எதிரே அமைக்கப்பட்டு உள்ள மின்கம்பம், கான்கிரீட்கள் உதிர்ந்து, கம்பிகள் துருப்பிடித்து காணப்பட்டு வருகிறது.

பள்ளி முன்பு பழுதாகி நிற்கும் மின்கம்பம்- அச்சத்தில் கிராம மக்கள்

இதனால் அந்த கம்பம் எப்போது வேண்டுமானாலும் சாலையில் செல்வோர் மீது விழும் அபாயம் நிலவி வருகிறது. மேலும், பள்ளி விடுமுறை காரணமாக மைதானத்தில் ஏராளமான சிறுவர் விளையாட செல்வதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். பழுதான மின்கம்பத்தை மாற்றக்கோரி பல முறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டி உள்ள அப்பகுதி மக்கள், பெரும் விபத்து ஏற்படும் முன் மின்சாரம் வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.