தேனி அரசு மருத்துவமனையில் மாற்றி வழங்கிய சடலம் தகனம்… உடலை கேட்டு உறவினர்கள் ஆர்ப்பாட்டம்…

 

தேனி அரசு மருத்துவமனையில் மாற்றி வழங்கிய சடலம் தகனம்… உடலை கேட்டு உறவினர்கள் ஆர்ப்பாட்டம்…

தேனி

தேனி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த முதியவரின் உடலை மாற்றிக் கொடுக்கப்பட்டதை கண்டித்து, அவரது உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்தவர் அய்யாவு (70). செருப்பு தைக்கும் தொழிலாளி. இவர் கடந்த 16ஆம் தேதி அன்று சாலையில் மயங்கி விழுந்ததில் படுகாயம் அடைந்தார். இதனை அடுத்து, அவரை உறவினர்கள் மீட்டு தேனி அரசு மருததுவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு, சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக் கிழமை காலை அய்யாவு உயிரிழந்தார். இதனை அடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனை முடிந்து, அங்குள்ள பிரேத பரிசோதனைக் கூடத்தில் வைக்கப்பட்டிருந்தது.

தேனி அரசு மருத்துவமனையில் மாற்றி வழங்கிய சடலம் தகனம்… உடலை கேட்டு உறவினர்கள் ஆர்ப்பாட்டம்…

இந்த நிலையில், நேற்று போலீசார் உடலை பெற சென்றபோது, அய்யாவுவின் சடலத்துக்கு பதிலாக பெரியகுளத்தை சேர்ந்த ராமு என்பவரின் உடலை மாற்றி கொடுத்துள்ளனர். சடலம் மாறி இருப்பதை அறிந்து உறவினர்கள் விசாரித்தபோது, அய்யாவுவின் உடலை ராமுவின் உறவினர்கள் பெற்றுச்சென்றதும், அதனை கடந்த ஞாயிற்றுக் கிழமை இறுதிச் சடங்கு செய்ததும் தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அய்யாவு உறவினர்கள், அவரது உடலை பெற்றுத் ஒப்படைக்கக் கோரி நேற்று தேனி க.விலக்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.