தேனி மாவட்ட காவல்துறை சார்பில், “புன்னகையை தேடி” திட்டம் தொடக்கம்

 

தேனி மாவட்ட காவல்துறை சார்பில், “புன்னகையை தேடி” திட்டம் தொடக்கம்

தேனி

தேனி மாவட்ட காவல்துறை சார்பில் காணமால் போன மற்றும் ஆதரவற்ற குழந்தைகளை மீட்டு, மறுவாழ்வு அளிக்கும் புன்னகையை தேடி இன்று தொடங்கப்பட்டது.

தமிழகத்தில் குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாக மாநிலம் முழுவதும் காவல்துறை சார்பில் “புன்னகையை தேடி” திட்டம் தொடங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்.பி., சாய்சரண் தேஜஸ்வி கலந்துகொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும், குழந்தைகளை மீட்பதற்காக தனியார் தொண்டு நிறுவன பங்களிப்புடன் வாங்கப்பட்ட நடமாடும் வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தேனி மாவட்ட காவல்துறை சார்பில், “புன்னகையை தேடி” திட்டம் தொடக்கம்

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய சாய்சரண் தேஜஸ்வி, புன்னகையை தேடி திட்டத்தின் முக்கிய நோக்கம், காணாமல்போன குழந்தைகள், கடத்தப்பட்ட குழந்தைகள், சாலையோரங்களில் சுற்றித்திரியும் குழந்தைகளை மீட்டு வெற்றோர் மற்றும் பாதுகாவலர்களிடம் ஒப்படைப்பது என கூறினார். மேலும், குழந்தை தொழிலாளர்கள், கொத்தடிமை தொழிலில் ஈடுபடும் குழந்தைகள், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகளை மீட்டெடுத்து, அவர்களுக்கு மறுவாழ்வுக்கு வழிவகை செய்வதே நோக்கம் என்று கூறினார்.

இதுபோன்ற சூழலில் உள்ள குழந்தைகளை மீட்க மற்றும் குழந்தைகளின் நல உதவிக்கு 1098 என்ற இலவச எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் அவர் அறிவுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில், கூடுதல் எஸ்.பி சங்கரன், பெண் காவல் அதிகாரிகள், மாவட்ட குழந்தைகள் நல குழு தலைவர் சுரேஷ், மாவட்ட சைல்டு லைன் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.