தேனியில் வேளாண் சட்டங்களை கண்டித்து, திமுகவினர் ஆர்ப்பாட்டம்

 

தேனியில் வேளாண் சட்டங்களை கண்டித்து, திமுகவினர் ஆர்ப்பாட்டம்

தேனி

தேனியில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்த்தில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, திமுகவினர் போராட்டத்தில் ஈடுபடுமாறு, அக்கட்சி தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு விடுத்திருந்தார்.

தேனியில் வேளாண் சட்டங்களை கண்டித்து, திமுகவினர் ஆர்ப்பாட்டம்

இதனை அடுத்து, இன்று தேனி நகரில் மாவட்ட திமுக சார்பில் வேளாண் சட்டங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நேரு சிலை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியின் வடக்கு மாவட்ட பொருளாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தேனியில் வேளாண் சட்டங்களை கண்டித்து, திமுகவினர் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பிய போராட்டக்காரர்கள், வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து, நேரு சிலை பகுதியில் தொடங்கி பங்களாமேடு வரை பேரணியாக சென்றனர். இந்த போராட்டம் காரணமாக தேனி நகரில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.