தேனியில் அரசு மருத்துவர்கள் உள்பட 6 பேருக்கு கொரோனா! – மக்கள் அதிர்ச்சி

 

தேனியில் அரசு மருத்துவர்கள் உள்பட 6 பேருக்கு கொரோனா! – மக்கள் அதிர்ச்சி

தேனியில் அரசு மருத்துவர்கள் உள்பட 6 பேருக்கு கொரோனா! – மக்கள் அதிர்ச்சி
தேனி மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் உள்ளிட்ட ஆறு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. தவிர்க்க வழி தெரியாமல் அரசு திணறி வருகிறது. பொது மக்கள் ஒத்துழைக்கவில்லை என்று மக்கள் மீது பழிபோடப்பட்டு வருகிறது.

தேனியில் அரசு மருத்துவர்கள் உள்பட 6 பேருக்கு கொரோனா! – மக்கள் அதிர்ச்சிஇந்த நிலையில் முன்களப் பணியாளர்கள் என்று கொண்டாடப்படும் மருத்துவர்களுக்கும் அதிக அளவில் கொரோனா தொற்று ஏற்பட்டு வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தி வருகிறது.
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர் உள்ளிட்ட ஆறு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 175 ஆக உயர்ந்துள்ளது. இதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 124 பேர் குணமடைந்துள்ளனர். 49 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று அரசு அறிவித்துள்ளது.

தேனியில் அரசு மருத்துவர்கள் உள்பட 6 பேருக்கு கொரோனா! – மக்கள் அதிர்ச்சிநேற்று நோய்த் தொற்று ஏற்பட்டவர்களில் ஒருவர் மருத்துவர், ஒருவர் லோயர் கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர், மூன்றாவது நபர் தேனியில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை செய்து வரும் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்தவர். நான்காவது நபர் சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு வந்தவர் ஆவார். ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஒருவரின் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் ஆறு பேருக்கு கொரோனா பரவல் ஏற்பட்டிருப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.