ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா: திணறும் தேனி மாவட்டம்!

 

ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா: திணறும் தேனி மாவட்டம்!

தேனி மாவட்டத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சமாளிக்க முடியாமல் மாவட்ட நிர்வாகம் திண்டாடி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தேனி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் தேனியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200ஐ கடந்தது. இதில் 125 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 73 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
இரண்டு மருத்துவர்கள், வருவாய் இன்ஸ்பெக்டர், காவலர்கள், சிறைக் கைதி என்று பலரும் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா: திணறும் தேனி மாவட்டம்!கடந்த 8 நாட்களில் மட்டும் பெரியகுளத்தில் 48 பேருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளது அப்பகுதி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்று இரண்டாக இருந்த கொரோனாத் தொற்று தற்போது 48 ஆக அதிகரித்துள்ளது. அரசு தீவிர தடுப்பு நடவடிக்கை, பரிசோதனை மேற்கொள்ளாவிட்டால் பாதிப்பு இன்னும் அதிகரிக்கும் என்று எச்சரிக்கின்றனர்.
தேனியில் திடீரென்று கொரோனா நோயாளிகள் அதிகரிக்க என்ன காரணம் என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொது மக்கள் ஊரடங்கை மதித்து, அத்தியாவசிய தேவைக்கு மட்டும் வெளியே வர வேண்டும். வெளியூரிலிருந்து யாராவது ஊருக்கு வந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும். பிரதான சாலைகளைத் தவிர்த்து கிராம சாலைகள் வழியாக பலரும் சொந்த ஊர் திரும்பியுள்ளனர். அவர்கள் மூலமாக கொரோனாத் தொற்று அதிகரித்து வருகிறதா என்று ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது” என்றனர்.

ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா: திணறும் தேனி மாவட்டம்!தற்போது தேனி மாவட்டத்தில் ஒரு நாளைக்கு 250 முதல் 400 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. தோராயமான கணக்கீடு மட்டுமே சொல்லப்படுகிறது, துல்லியமான தகவல் இல்லை. மேலும் 400 என்பது எல்லாம் மிகக் குறைவு… பெரியகுளம், தேனி பகுதியில் சோதனையை அதிகரித்து தொற்று உள்ளவர்களை கண்டறிந்தால் மட்டுமே தேனி மாவட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்க முடியும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.