கேரள எல்லையில் கொட்டும் மழையில் ஆய்வுசெய்த தேனி மாவட்ட ஆட்சியர்!

 

கேரள எல்லையில் கொட்டும் மழையில் ஆய்வுசெய்த தேனி மாவட்ட ஆட்சியர்!

தேனி

தேனி மாவட்டம் கம்பம் மெட்டு எல்லையில் உள்ள சோதனைச்சாடிவயில் கொரோனா தடுப்பு பணிகளை ஆட்சியர் கே.வி.முரளிதரன் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

தேனி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் மாவட்டத்தில் வைரஸ் தொற்று நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில், நேற்று புதிதாக 31 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், பாதிப்பிற்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்து 575 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், தேனி மாவட்டத்தின் அருகே அமைந்துள்ள கேரள மாநிலம் குமுளியில் வைரஸ் தொற்று தீவிரமடைந்து வருகிறது. இதனால் கடந்த 8ஆம் தேதி முதல் வரும் 14ஆம் தேதி வரை குமுளி நகரில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

கேரள எல்லையில் கொட்டும் மழையில் ஆய்வுசெய்த தேனி மாவட்ட ஆட்சியர்!

இதனால் குமுளி சாலை அடைக்கப்பட்டதால், தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் வாகனங்கள் இ-பாஸ் மற்றும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் பெற்று, கம்பம் மெட்டு, போடி மெட்டு வழியாக சென்று வருகின்றனர். இந்த நிலையில், கம்பம் மெட்டு எல்லை சோதனைச் சாவடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை தேனி மாவட்ட ஆட்சியர் கே.வி.முரளிதரன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டார்.

அப்போது, பலத்த மழைக்கு நடுவே குடைபிடித்தவாறு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தமிழக வனத்துறை, காவல்துறையினர் மற்றும் சுகாதாரத்துறை சோதனைச்சாவடியில் பணியில் இருந்தவர்களிடம் தடுப்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், கேரள மாநிலம் கம்பம்மெட்டு காவல் ஆய்வாளர் ராபர்ட் ஜானிராணியிடம், அந்த மாநில அரசின் நோய் தடுப்பு நடைமுறைகள் குறித்து கேட்டறிந்தார்.