வாக்குச்சாவடிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கை- தேனி ஆட்சியர் ஆலோசனை!

 

வாக்குச்சாவடிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கை- தேனி ஆட்சியர் ஆலோசனை!

தேனி

தேனி மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களில் கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்வது குறித்து, ஆட்சியர் கிருஷ்ணணுன்னி ஆலோசனை மேற்காண்டார்

சட்டமன்ற தேர்லை முன்னிட்டு, தேனி மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் அலுவலர்களுக்கு கொரேனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. மேலும், வாக்குச்சாவடிகளுக்கு முக கவசம், சானிடைசர் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்த பணிகள் குறித்து நேற்று சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணணுன்னி ஆலோசனை மேற்கொண்டார். ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்த இந்த கூட்டத்தில், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் செந்தில்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

வாக்குச்சாவடிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கை- தேனி ஆட்சியர் ஆலோசனை!

தொடர்ந்து, வீரபாண்டியில் உள்ள துணை செவிலியர் பயிற்சி பள்ளியில், வாக்குச்சாவடி மையங்களுக்கு, முக கவசம், கையுறை, சானிடைசர் உள்ளிட்ட 11 பாதுகாப்பு உபகரணங்களை அட்டை பெட்டிகளில் அடைக்கும் பணியினையும் ஆட்சியர் கிருஷ்ணணுன்னி நேரில் பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க ஊழியர்களுக்கு அறிவுத்தினார்.

இதனிடையே, தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணியாளர்கள் 100 சதவீதம் வாக்குப்பதிவு வடிவில் மனித சங்கியாக நின்று, வாக்களர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.