பழங்குடியின மக்களிடம் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய தேனி ஆட்சியர்!

 

பழங்குடியின மக்களிடம் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய தேனி ஆட்சியர்!

தேனி

போடி அருகே உள்ள சிறைக்காடு மலைவாழ் கிராமத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட தேனி ஆட்சியர் முரளிதரன், பழங்குடியின மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அணைக்கரைபட்டி ஊராட்சி சிறைக்காடு பழங்குடியின கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று மதியம் தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன், சிறைகாடு மலைக்கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பழங்குடியின மக்களிடம் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய தேனி ஆட்சியர்!

அப்போது, மலைவாழ் மக்களை நேரில் சந்தித்து, அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர், கொரோனா தடுப்பூசி போடாத மலைவாழ் மக்களிடம் தடுப்பூசியின் அவசியத்தை எடுத்து கூறிய ஆட்சியர், முகக் கவசங்களை கண்டிப்பாக அணிய வேண்டும் என்றும், குழந்தைகளை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, வலசத்துறை முதல் மல்லிப்பட்டி வரையிலான கிராமப்புற சாலை மேம்பாட்டு நிதி2019-20ன் கீழ் அமைக்கப்பட்டு உள்ள தார்ச்சாலை பணியின் தரம் குறித்தும் ஆட்சியர் முரளிதரன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.