கொரோனா வார்டில் கவச உடை அணிந்து சென்று ஆய்வுசெய்த தேனி ஆட்சியர்!

 

கொரோனா வார்டில் கவச உடை அணிந்து சென்று ஆய்வுசெய்த தேனி ஆட்சியர்!

தேனி

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொரோனா வார்டில், ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி கவச உடை அணிந்து சென்று நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்து வருகிறது. தினசரி பாதிப்பு 700ஐ நெருங்கியுள்ள நிலையில், மாவட்டத்தில் 5 ஆயிரத்து 300-க்கும மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி விட்டதால், புதிதாக வரும் நோயாளிகளுக்கு படுக்கைகள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது.

கொரோனா வார்டில் கவச உடை அணிந்து சென்று ஆய்வுசெய்த தேனி ஆட்சியர்!

இந்த நிலையில், தேனி அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அங்குள்ள கொரோனா வார்டில் நேற்று மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

இதற்காக முழு கவச உடை அணிந்து கொண்டு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி கொரோனா வார்டுக்கு சென்ற ஆட்யசியர் அங்கு, சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் மருத்துவர்கள் அளிக்கும் சிகிச்சை குறித்தும், குறைபாடுகள் குறித்து ஆட்சியர் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது மருத்துவமனை பொறுப்பு முதல்வர் இளங்கோவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.