வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி- தேனி ஆட்சியர் ஆய்வு!

 

வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி- தேனி ஆட்சியர் ஆய்வு!

தேனி

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேனி மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில், வேட்பாளர்களின் சின்னம் பொருத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதனையொட்டி, போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேட்பாளர்களுக்கான சின்னம் பொருத்தும் பணி, அங்குள்ள அரசு பொறியியல் கல்லூரி வாளகத்தில் நடைபெற்றது. இந்த பணிகளை தேனி மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கிருஷ்ணனுண்ணி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி- தேனி ஆட்சியர் ஆய்வு!

தொடர்ந்து, ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த, ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சின்னம் பொருத்தும் பணியையும் ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ், ஆண்டிப்பட்டி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவசுப்ரமணியன், வாக்குப்பதிவு இயந்திர ஒருங்கிணைப்பாளர் டி.தியாகராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.