கொரோனா தடுப்பு நடவடிக்கை… தமிழக – கேரள எல்லையில், தேனி ஆட்சியர் ஆய்வு!

 

கொரோனா தடுப்பு நடவடிக்கை… தமிழக – கேரள எல்லையில், தேனி ஆட்சியர் ஆய்வு!

தேனி

தேனி மாவட்ட எல்லை பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைளை ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சிக்குட்பட்ட குட்டையா பிள்ளை தெருவில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, அந்த பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், அங்கு நகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை… தமிழக – கேரள எல்லையில், தேனி ஆட்சியர் ஆய்வு!

தொடர்ந்து, கூடலூர் நகராட்சிக்குட்பட்ட லோயர்கேம்ப் மற்றும் 20-வது வார்டுகளில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், அங்குள்ள மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு நோய்தடுப்பு மருந்துகள் வழங்கப்படுவது குறித்து பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, தமிழக – கேரள எல்லைப்பகுதிகளில் அமைக்கப்பட்ட உள்ள சோதனைச்சாவடியில் ஆய்வுநடத்திய ஆட்சியர், அங்கு மேற்கொள்ள இந்த ஆய்வின்போது நகராட்சி ஆணையர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.