பழைய இ- பாஸில் பெயர், தேதியை மாற்றி மோசடி : தேனியில் கார் உரிமையாளர் கைது!

 

பழைய இ- பாஸில் பெயர், தேதியை மாற்றி மோசடி : தேனியில் கார் உரிமையாளர் கைது!

தேனி மாவட்டத்தை சேர்ந்த சுகுமார் என்பவர் கோவையில் உள்ள தனியார் கம்பெனியில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவர் தனது சொந்த ஊரான தேனி செல்ல திட்டமிட்டுள்ளார். இதை அறிந்த கார் உரிமையாளர் வெம்மாண்ட சாமி என்பவர் சுகுமாரிடம், ‘என்னிடம் பணம் கொடுங்கள் உங்களுக்கு இ-பாஸ் ரெடி செய்து தருகிறேன்’ என்று கூறி இ-பாஸ் தயார் செய்து அவரிடம் கொடுத்து விட்டு அவரது காரிலேயே தேனிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

பழைய இ- பாஸில் பெயர், தேதியை மாற்றி மோசடி : தேனியில் கார் உரிமையாளர் கைது!

தேனி மாவட்ட எல்லையான காட்டு ரோடு சோதனைச் சாவடியில் போலீசார் வாகனங்களை வழிமறித்து சோதனை செய்து வந்தனர். அப்போது சுகுமார் வந்த காரை சோதனை செய்தபோது அவர் கொண்டுவந்த இ -பாஸ் போலியானது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் போலி பாஸ் கொண்டு வந்ததில் சுகுமாருக்கும், கார் ஓட்டுநர் முருகேசனுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பது தெரியவந்தது. மேலும் பழைய இ-பாஸில் தேதி, பெயர் மாற்றம் செய்து பிரிண்ட் எடுத்து சுகுமாரை அனுப்பியது கார் உரிமையாளர் வெம்மாண்டசாமி என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கார் ஓட்டுநர் முருகேசன், கார் உரிமையாளர் வெம்மாண்டசாமி ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் கார் உரிமையாளரை பெரியகுளம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பழைய இ- பாஸில் பெயர், தேதியை மாற்றி மோசடி : தேனியில் கார் உரிமையாளர் கைது!

மேலும் கார் ஓட்டுநர் முருகேசன் மற்றும் சுகுமார் ஆகிய இருவரையும் தனிமைப்படுத்தும் முகாமிற்கு அழைத்துச் சென்றதோடு அவர்கள் கொண்டுவந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

முன்னதாக சென்னையை சேர்ந்த கார் ஓட்டுநர் ஒருவர் நான்காயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு போலி இ பாஸ் தயாரித்துக் கொடுத்த விவகாரத்தில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.