லடாக்குக்கு ராணுவத் தளவாடங்களை ஏற்றிச் சென்றபோது விபத்து! – தேனி ராணுவ வீரர் பலி!

 

லடாக்குக்கு ராணுவத் தளவாடங்களை ஏற்றிச் சென்றபோது விபத்து! – தேனி ராணுவ வீரர் பலி!

லடாக்குக்கு ராணுவத் தளவாடங்களை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில் தேனியைச் சேர்ந்த ராணுவ வீரர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய – சீன எல்லை விவகாரம் தொடர்பாக இரு நாடுகளும் தங்கள் எல்லைப் பகுதிகளில் ராணுவம் மற்றும் தளவாடங்களை குவித்து வருகின்றன. இந்த நிலையில் ஒடிஷா மாநிலம் புவனேஷ்வரில் பணியாற்றி வந்த தேனியைச் சேர்ந்த ராணுவ வீரர் அழகுராஜா (43) ராணுவத் தளவாடங்களை ஏற்றிக்கொண்டு லடாக் நோக்கி சென்று கொண்டிருந்தார். அழகு ராஜா வாகனத்தை ஓட்ட அவருடன் இரண்டு வீரர்களும் வந்துள்ளனர்.

லடாக்குக்கு ராணுவத் தளவாடங்களை ஏற்றிச் சென்றபோது விபத்து! – தேனி ராணுவ வீரர் பலி!
இவர்கள் சென்ற வாகனம் ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டம் சோட்டுபால் என்ற இடத்துக்க வந்தபோது விபத்துக்குள்ளானது. இதில் வாகனத்தை ஓட்டிவந்த அழகுராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த இரண்டு ராணுவ வீரர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து அழகுராஜாவின் உடன் இன்று மாலை அல்லது இரவு தேனி மாவட்டம் குச்சனூர் அருகே உள்ள துரைசாமிபுரத்துக்கு கொண்டுவரப்படும் என்று ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லடாக்குக்கு ராணுவத் தளவாடங்களை ஏற்றிச் சென்றபோது விபத்து! – தேனி ராணுவ வீரர் பலி!இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. அழகு ராஜா 15 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வருகிறார் என்றும், கடந்த மார்ச் மாதம்தான் விடுப்பு முடிந்து பணியில் சேர்ந்தார் என்றும் கிராம மக்கள் கூறுகின்றனர். அழகுராஜாவின் உயிரிழப்பு அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.