தயாரிப்பாளர் தேனாண்டாள் முரளி மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதி

 

தயாரிப்பாளர் தேனாண்டாள் முரளி மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதி

விஜய் நடித்த மெர்சல் உள்ளிட்ட பல திரைப்படங்களையும் முரளி தயாரித்துள்ளார். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின், உரிமையாளர் ராம நாராயணனின், மகனும் தேனாண்டாள் நிறுவனத்தின் தயாரிப்பாளருமான முரளி மாரடைப்பால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின், உரிமையாளர் ராம நாராயணன் மறைவுக்கு பின் முரளியே பல்வேறு திரைப்படங்களை தயாரித்துவந்தார்.

தயாரிப்பாளர் தேனாண்டாள் முரளி மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதி

அண்மையில் நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவியில் போட்டியிட்ட முரளி, வெற்றியும் பெற்றார். முரளிக்கு லேசான மாரடைப்பு தான் ஏற்பட்டிருப்பதாகாவும், அவர் ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார். அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முரளிக்கு நாளை ஆஞ்சியோகிராம் சிகிச்சை நடைபெற உள்ளது. திரையுலகினர் பலரும் முரளி விரைவில் நலமுடன் வீடு திரும்ப வேண்டுமென வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன், அவருக்காக பிரார்த்தனையும் செய்துவருகின்றனர்.