அப்போது எடப்பாடியின் கை நடுங்கியது ..ஆட்டம் கண்டது… போட்டு உடைத்த புகழேந்தி

 

அப்போது எடப்பாடியின் கை நடுங்கியது ..ஆட்டம் கண்டது… போட்டு உடைத்த புகழேந்தி

கொடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு இருக்கிறது என்று ஆ.ராசா முன்னர் தெரிவித்திருந்தார். அதுபோலவே கொடநாடு கொலை வழக்கில் தொடர்புடைய சயான் அளித்த வாக்குமூலத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் சொன்னதின் பேரில் தான் சம்பவம் நடந்ததாக தெரிவித்திருந்தார். ஆனால் இப்போது அது குறித்து யாரும் எடப்பாடி பழனிசாமியின் பெயரை தெரிவிக்க வில்லை. அப்படி இருக்கும் போது எடப்பாடி பழனிச்சாமி தானாக முன்வந்து இதனால் பதற்றம் அடைய வேண்டும் என்று கேட்கிறார் அதிமுகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி.

அப்போது எடப்பாடியின் கை நடுங்கியது ..ஆட்டம் கண்டது… போட்டு உடைத்த புகழேந்தி

அவர் மேலும், கொடநாடு வழக்கு சம்பந்தமாக விசாரணை அதிகாரிகள் யாரேனும் எடப்பாடி பழனிச்சாமியை விசாரணைக்கு அழைத்தார்களா? நீதிமன்றத்தில் இவரை விசாரணைக்கு அழைத்தார்களா? அப்புறம் ஏன் பதற வேண்டும்? எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதையாக சட்டப்பேரவையில் சபாநாயகரின் அனுமதி பெறாமலேயே கொடநாடு விவகாரத்தினை எழுப்பியது எடப்பாடி பழனிச்சாமிதான். அவர் மைக் பிடித்து பேசியபோது கை நடுங்கியது …ஆட்டம் கண்டது. இதை எல்லோரும் கவனிக்க வேண்டும். உண்மை என்ன என்பதை இந்த அரசும், காவல்துறையும் வெளியே கொண்டு வந்துவிடும். அன்றைக்கு நிச்சயமாக தெரியும் என்கிறார் அழுத்தமாக.

அப்போது எடப்பாடியின் கை நடுங்கியது ..ஆட்டம் கண்டது… போட்டு உடைத்த புகழேந்தி

கொடநாடு பங்களா பாதுகாப்புக்கு ராவ் பகதூர், கிருஷ்ண பகதூர் என்று, இரண்டு பகதூர் மட்டும்தானா? ஏன் அந்த பங்களாவில் இருந்து போலீஸ் பாதுகாப்பை வாபஸ் வாங்கினீர்கள். ஒரு போலீஸ் கூட அந்த பங்களாவில் பாதுகாப்புக்கு இல்லாமல் போனது ஏன்? என்பதற்கு எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் சொல்ல வேண்டும் என்கிறார் புகழேந்தி.

போலீஸ் பாதுகாப்பு வாபஸ் வாங்கப்படுகிறது. மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. இது எல்லாம் எடப்பாடியின் மனசாட்சிக்குத்தான் தெரியும் என்று சொல்லும் புகழேந்தி, ஜெயலலிதா வாழ்ந்தபோது அந்த பங்களாவிற்கு செல்லாத அதிமுக நிர்வாகிகள் கிடையாது. அதிகாரிகள் கிடையாது. எல்லோரும் பயபக்தியுடன் செல்வோம். அப்படிப்பட்ட இடத்தில் கொலை, கொள்ளை வழக்கு நடக்கிறது. அங்கே ஏன் சென்று எடப்பாடி பார்க்கவே இல்லை. அந்த மாவட்டத்தில் இருந்த எஸ்.பி.வேலுமணியும் ஏன் போகவில்லை என்று கேட்கிறார்.

நான் நிரபராதி; நீ எத்தனை கேஸ் வேண்டுமானாலும் போடு.. என் மேல் எந்த அழுக்கும் இல்லை என்று தைரியமாக சொல்ல வேண்டிய எடப்பாடி பழனிச்சாமி ஏன் பதறுகிறார்? எல்லோரையும் அழைத்து உட்கார வைத்து கண்டனம் தெரிவிக்கிறார். அந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் எல்லோரும் ஆவேசமாக கத்தும் போது ஓபிஎஸ் மட்டும் சிரிச்சிக்கிட்டு இருக்கிறார். ஒரே காமெடியா இருக்குது என்கிற புகழேந்தி, . பொது பிரச்சனைக்காக சாலையில் உட்கார்ந்து போராடியிருந்தால் நல்ல பெயர் கிடைத்திருக்கும். சொந்த பிரச்சனைக்காக இப்படி செய்தால் எப்படி நல்ல பெயர் கிடைக்கும் என்று கேட்கிறார்.