• April
    07
    Tuesday

Main Area

Main



"ஏலேலோ ஐலசா" ..என ATM மெஷினையே அலேக்காக தூக்கினர் -பதினாலு லட்சத்தோடு பறந்தவர்களுக்கு போலீஸ் வலை ...

ஓரியண்டல்  வர்த்தக வங்கி
ஓரியண்டல்  வர்த்தக வங்கி

ராஜஸ்தானில் திங்கள்கிழமை இரவு தாடா கிராமத்தில் உள்ள ஓரியண்டல்  வர்த்தக வங்கியின் ஏடிஎம் மெஷினை 14 லட்ச ரூபாயுடன்  மர்ம நபர்கள் எடுத்துக்கொண்டு  ஓடிய அதிர்ச்சியான சம்பவம் நடந்தது 

bank

ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தில் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ரூ .14 லட்சம் அடங்கிய தானியங்கி டெல்லர் இயந்திரத்தை  முகமூடி அணிந்த திருடர்கள் தூக்கி சென்று விட்டதாக  போலீசார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். இந்த சம்பவம் திங்கள்கிழமை இரவு தாடா கிராமத்தில் உள்ள ஓரியண்டல்  வர்த்தக வங்கியின் ஏடிஎம்-ல்   நடந்ததாக பூல் கா பாக் காவல் நிலைய எஸ்.எச்.ஓ ரவீந்திர பிரதாப் சிங் தெரிவித்தார். அங்கு   பாதுகாப்புக்கு எந்த  காவலரும் வைக்கப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

police

முகமூடி அணிந்த மூன்று ஆண்கள் சி.சி.டி.வி கேமராவில்  காணப்படுகிறார்கள், ஆனால் முழுமையான விசாரணையின் பின்னரே குற்றம் சாட்டப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கை தெளிவாக தெரியும்  என்று ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி தெரிவித்தார்.

bank

வங்கி நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய முயற்சிகள் நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

2018 TopTamilNews. All rights reserved.