Home மாவட்டங்கள் சென்னை பயம் இல்லாமல் திருட சரக்கு அடித்த புதுத்திருடன்! வீட்டுக்குள் புகுந்ததும் போதை தலைக்கேறி தூங்கியதால்...?

பயம் இல்லாமல் திருட சரக்கு அடித்த புதுத்திருடன்! வீட்டுக்குள் புகுந்ததும் போதை தலைக்கேறி தூங்கியதால்…?

கொரோனா ஊரடங்கில் உணவுசம்பந்தப்பட்ட தொழில் மட்டும் தங்கு தடையின்றி நடந்து வருகிறது. சாலையில் யாருமே நடமாட அனுமதி இல்லாத போதும், உணவு டெலிவரி செய்வோருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அவர்கள் மட்டும் வேலை செய்து பிழைத்து வந்தார்கள்.

அப்படி இருந்தும், வாங்கிய கடனை அடைக்க முடியாமல் அல்லாடியிருக்கிறார் பொறியியல் பட்டதாரி முத்தழகன். கொளத்தூரைச் சேர்ந்த இவர், உணவு டெலிவரி செய்யும் வேலையில் போதிய பணம் வராததால், வீடு புகுந்து கொள்ளையடித்தாவது கடனை அடைக்கலாமா என்று யோசித்திருக்கிறார்.
அப்போது அடையாளம்பட்டு பகுதியில் உணவு டெலிவரி செய்ய போனபோது, ஒரு தனியாக இருப்பதை நோட்டமிட்டிருக்கிறார்.

இரவில் அந்த வீட்டில் புகுந்து கொள்ளையடிக்கலாம் என்று வந்தவர், முதன் முதலாக திருடபோவதால் பயம் இல்லாமல் திருட, சரக்கு அடித்திருக்கிறார். ஆனால், காம்பவுண்ட் சுவர் ஏறிக்குதித்து மொட்டை மாடிக்கு தாவி ஏறியிருக்கிறார். ஆனால், மொட்டை மாடியில் இருந்த கதவை திறக்க முடியாததால், அக்கதவு திறந்ததும் கொள்ளையடிக்கலாம் என்று இருட்டில் உட்கார்ந்தவருக்கு, போதை தலைக்கேறிவிட்டது. அப்படியே தூங்கிவிட்டார்.

பொழுது விடிந்து, வெயில் சுள்ளென அடித்தபோதும், தூக்கம் கலையாமல் படுத்துக்கிடந்தவரை வீட்டுக்காரர் வந்து எழுப்பி விட்டதும், தப்பியோட முயன்று சிக்கிவிட்டார். மதுரவாயல் போலீசில் அவரை ஒப்படைத்ததால் விசாரணைக்கு பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Most Popular

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வெற்றி டார்க்கெட் 175 #IPL #KKRvsRR

ஐக்கிய அமீரகத்தில் நடக்கும் ஐபிஎல் திருவிழாவில் நேற்று டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எளிதாக வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. இன்றைய போட்டியில் ராஸ்தான் ராயல்ஸ் அணியோடு மோதுகிறது கொல்கத்தா நைட்ரைடர்ஸ்.

நாளை மறுநாள் முதல் தமிழகத்தில் கூடுதலாக 7 சிறப்பு ரயில்கள் இயக்க அனுமதி! முன்பதிவு எப்போது? விவரம் உள்ளே…

தமிழகத்தில் பொதுப்போக்குவரத்து பேருந்து சேவை கடந்த 1 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. செப்.7 ஆம் தேதி முதல் தனியார் பேருந்துகள், மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து சேவை மற்றும் பயணிகள்...

யார் புறக்கணித்தால் என்ன? இயற்கையை நேசித்தால் வலிகள் குறையும்!

வாழ்க்கையில் உன்னை தாழ்த்துவது உன்னுள் உள்ள எண்ணங்கள் தான். உன்னை மேலோங்க வைப்பதும் உன் புத்தியிலும் மனதிலும் உள்ள எண்ணங்கள் தான். அதை உன்னுள் உனக்கே வெளிபடுத்து. நீ மனதளவில்...

நாளை செய்தியாளர் சந்திப்பு- ‘ஓபிஎஸ்’சின் முடிவு என்ன?

சசிகலா விடுதலையானால், அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்துவார் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் ‘திடும்’ என ஓபிஎஸ் புறப்பட்டு வருவார் என அந்த கட்சியினரே நினைத்திருக்கவில்லை.
Do NOT follow this link or you will be banned from the site!