ரேஷன் பொருட்கள் மாயம்… தப்பியோடிய ஊழியர்! புதுக்கோட்டையில் பரபரப்பு

 

ரேஷன் பொருட்கள் மாயம்… தப்பியோடிய ஊழியர்! புதுக்கோட்டையில் பரபரப்பு

புதுக்கோட்டையில் ரேஷன் கடையைத் திறந்து வைத்துவிட்டு கடை ஊழியர் மாயமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள ரேஷன் கடையில் பகுதி நேர ஊழியராக வேலை செய்து வந்தவர் பாலு. கொரோனா ஊரடங்கு காரணமாக மக்களுக்கு ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க வந்த மக்கள் விற்பனையாளரைக் காணாது திரும்பினர். இது குறித்து பொது மக்கள் சார்பில் புகாரும் அளிக்கப்பட்டது.
தகவல் அறிந்து ஆலங்குடி குடிமைப் பொருள் வழங்கல் அலுவலர் பிரவீணா மற்றும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடைக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது ரூ.11 ஆயிரம் மதிப்புடைய ரேஷன் பொருட்கள் காணவில்லை என்பது தெரியவந்தது.

ரேஷன் பொருட்கள் மாயம்… தப்பியோடிய ஊழியர்! புதுக்கோட்டையில் பரபரப்புபகுதி நேர ஊழியர் பாலு எங்கே சென்றார் என்று தெரியாத நிலையில், மற்றொரு நியாயவிலைக்கடையில் இருந்த விற்பனையாளர் சண்முகநாதன் அழைத்து வரப்பட்டு பொது மக்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டது. ரேஷன் கடையில் பொருட்கள் மாயமான நிலையில், விற்பனையாளர் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.