சேலம் இரும்பாலையில் செம்பு கம்பிகள் திருட்டு – 5 பேரை கைதுசெய்த தனிப்படை போலீசார்

 

சேலம் இரும்பாலையில் செம்பு கம்பிகள் திருட்டு – 5 பேரை கைதுசெய்த தனிப்படை போலீசார்

சேலம்

சேலம் இரும்பாலையில ஊழியர்களை கட்டிப்போட்டு பல லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்பு கம்பிகள் திருடிப்பட்ட வழக்கில் 5 பேரை போலீசார் கைதுசெய்தனர். சேலம் அருகே கோட்டகவுண்டம்பட்டியில், ஹைடெக் மினரல்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற இரும்பு தொழிற்சாலை உள்ளது. வங்கி கடன் காரணமாக ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில், வங்கி சார்பில் காவலாளிகள் நியமிக்கப்பட்டு கண்காணித்து வந்தனர்.

சேலம் இரும்பாலையில் செம்பு கம்பிகள் திருட்டு – 5 பேரை கைதுசெய்த தனிப்படை போலீசார்

இந்த நிலையில் கடந்த மாதம் 9ஆம் தேதி நள்ளிரவில் ஆலைக்குள் புகுந்த 17 பேர் கொண்ட மர்மகும்பல், காவலாளிகளை அறைக்குள் பூட்டிவிட்டு, தொழிற்சாலையில் டிரான்ஸ்பார்மர் மற்றும் இயந்திரங்களில் இருந்த செம்பு கம்பிகளை திருடி சென்றனர். இந்த சம்பவத்தில் சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்பு கம்பிகள் திருடுபோனது தெரியவந்தது. இந்த நிலையில் கோவை மாவட்டம் அன்னூர் சேவூர் காவல்நிலைய போலீசார், திருட்டு வழக்கில் தொடர்புடைய சிலரை பிடித்து விசாரணை நடத்தினர்.

சேலம் இரும்பாலையில் செம்பு கம்பிகள் திருட்டு – 5 பேரை கைதுசெய்த தனிப்படை போலீசார்

அப்போது, அவர்களுக்கு சேலம் இரும்பு ஆலையில் நடந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்த வழக்கு தொடர்பாக சேலத்தை சேர்ந்த சரவணன், சங்கர் மற்றும் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பிரபாகரன், கருப்புசாமி, பெரியவன் ஆகிய 5 பேரை கைது செய்தனர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் திருடிய செம்பு கம்பிகளை, மேட்டுப்பாளையத்தில் உள்ள பழைய இரும்பு கடைக்காரர் ஆனந்தன் என்பவரிடம் விற்றது தெரியவந்தது இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை பிடிக்க, மேட்டுப்பாளையத்தில் சேலம் மாநகர தனிப்படை போலீசார் முகாமிட்டு உள்ளனர்.