பங்களாவில் வசித்த முதியோர் -வீட்டினுள் புகுந்த மர்ம நபர்கள் -கட்டிப்போட்டு விட்டு நடந்த பயங்கரம்

 

பங்களாவில் வசித்த முதியோர் -வீட்டினுள் புகுந்த மர்ம நபர்கள்  -கட்டிப்போட்டு விட்டு நடந்த பயங்கரம்

மகாராஷ்டிரா மாநிலம் புனேவின்  ஆந்தில் உள்ள சாது வாஸ்வானி நகரில் ஒரு பங்களா வீட்டில்  வயதான தம்பதியினர் இருவர் பல லட்சக்கணக்கான நகைகள் மற்றும் பொருட்களுடன் தனியே வசித்து வந்தார்கள் . இதுபற்றி அறிந்த அந்த பகுதியை சேர்ந்த சிலர் அந்த முதியோரின் வீட்டிற்குள்  நுழைந்து அவர்களிடம் இருந்த பணம், நகைகள் ஆகியவற்றை கொள்ளையடித்தனர் .

பங்களாவில் வசித்த முதியோர் -வீட்டினுள் புகுந்த மர்ம நபர்கள்  -கட்டிப்போட்டு விட்டு நடந்த பயங்கரம்

அந்த வீட்டிற்குள்  ஏப்ரல் 25தேதி  இரவு சந்தீப் ஹேண்டே, கிஷோர் கல்யாண் கங்கேட், போலேஷ் சவான், மங்கேஷ் குண்டே, ராகுல் பவானே மற்றும் விக்ரம் தாபா என்ற ஆறு பேறும் நுழைந்தார்கள் .அந்த கொள்ளையர்களில் 3 பேர் அவுரங்காபாத்தைச் சேர்ந்தவர்கள், மற்றவர்கள் ஜல்னா மற்றும் நாசிக் நகரைச் சேர்ந்தவர்கள்.

அந்த நபர்கள் பயங்கர  ஆயுதங்களுடன்  வயதான தம்பதியரின் பங்களாவுக்குள் நுழைந்து முதலில் அந்த வீட்டு சமையல்காரரைத் தாக்கினார்கள் . பின்னர் அவர்கள் அந்த முதிய  தம்பதியினரை கத்திமுனையில் மிரட்டி, அலமாரியில் இருந்து 15.8 லட்சம் மதிப்புள்ள மதிப்புமிக்க பொருட்களை கொள்ளையடித்தனர், அதில் ரூ .70,000 பணம் , தங்கம் மற்றும் வைர ஆபரணங்கள் மற்றும் அமெரிக்க டாலர்கள் இருந்தன.பிறகு அவர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர்

.இது பற்றி போலீசுக்கு தகவல் தெரிந்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டார்கள் .அப்போது அவர்கள் அந்த வீடுகளை கொள்ளையடிப்பதற்கு முன்பு தனியாக வசித்து வந்த வயதான குடிமக்கள் பற்றிய தகவல்களை சேகரித்து பின்னர் அவர்களது வீட்டை கொள்ளையடித்ததாக  காவல்துறை துணை ஆணையர் பங்கஜ் தேஷ்முக் தெரிவித்தார். அவர்கள் புனே, பிம்ப்ரி-சின்ச்வாட் மற்றும் ஜல்னா ஆகிய பகுதிகளில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்களிலும்  சம்பந்தப்பட்டிருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.