தியேட்டர்கள் திறப்பு : அக்டோபர் 28 ஆம் தேதி சுகாதார குழுவுடனான ஆலோசனைக்கு பின் முடிவு!

தியேட்டர்கள் திறப்பு : அக்டோபர் 28 ஆம் தேதி  சுகாதார குழுவுடனான ஆலோசனைக்கு பின் முடிவு!

தியேட்டர்கள் திறப்பு குறித்து அக்டோபர் 28 ஆம் தேதி சுகாதார குழுவின் கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் பழனிசாமியை இன்று காலை 11 மணிக்கு அவரது இல்லத்தில் திரையரங்க உரிமையாளர்கள் சங்க செயலாளர் ரோகிணி பன்னீர்செல்வம், பொருளாளர் இளங்கோவன் தலைமையில் திரையரங்க உரிமையாளர்கள் சந்தித்தனர்.

தியேட்டர்கள் திறப்பு : அக்டோபர் 28 ஆம் தேதி  சுகாதார குழுவுடனான ஆலோசனைக்கு பின் முடிவு!

இதுகுறித்து அவர்கள் அளித்த மனுவில், ஆயுதபூஜை (அக் 25) அன்றே தியேட்டர்களை திறக்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். தியேட்டர்களில் ஒரு நாளைக்கு நான்கு காட்சிகள் என்பதற்கு பதில் கூடுதல் காட்சிகள் திரையிட அனுமதிக்க வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறைக்கு பதில் மூன்று ஆண்டுக்கு ஒருமுறை தியேட்டர்களை புதுப்பிக்க அனுமதிக்க வேண்டும். உரிமம் பெற பொதுப்பணித்துறையிடமே அனுமதி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.

தியேட்டர்கள் திறப்பு : அக்டோபர் 28 ஆம் தேதி  சுகாதார குழுவுடனான ஆலோசனைக்கு பின் முடிவு!

இதுகுறித்து பதிலளித்த முதல்வர் பழனிசாமி, அனைத்து தொழில்நிறுவனங்களும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் குளிர்சாதன வசதியுடன் இருப்பதால் உடனடியாக அனுமதி வழங்க இயலவில்லை. அக்டோபர் 28 அன்று சுகாதார குழுவின் கூட்டத்தில் இது சம்பந்தமாக விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறியதாக தெரிகிறது.

தியேட்டர்கள் திறப்பு : அக்டோபர் 28 ஆம் தேதி  சுகாதார குழுவுடனான ஆலோசனைக்கு பின் முடிவு!

இந்த சந்திப்பின் போது அபிராமி ராமநாதன், அம்பத்தூர் ராக்கி தியேட்டர் உரிமையாளர் ஹரி, சென்னை உட்லண்ட்ஸ் தியேட்டர் உரிமையாளர் வெங்கடேஷ், வேலூர் சீனிவாசன், ராமநாதபுரம் ரமேஷ் தியேட்டர் உரிமையாளர் ரமேஷ், சேலம் ராஜா ஆகியோர் உடன் இருந்தது குறிப்பிடத்தக்கது.