4 மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் தியேட்டர்கள் திறப்பு!

 

4 மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் தியேட்டர்கள் திறப்பு!

தமிழகத்தில் சுமார் 4 மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் 50% பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் திறக்கப்பட உள்ளன.

4 மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் தியேட்டர்கள் திறப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 1,630 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரேநாளில் 23பேர் உயிரிழந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34ஆயிரத்து 709ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனா தொற்று பரவலில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 47ஆயிரத்து 5ஆக அதிகரித்துள்ளது.

4 மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் தியேட்டர்கள் திறப்பு!

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தடை விதிக்கப்பட்டது . அந்த வகையில் கடந்த மே மாதம் கொரோனா உச்சத்தில் இருந்த போது தியேட்டர்கள் மூடப்பட்டன. இதை தொடர்ந்து கொரோனா படிப்படியாக குறைய தொடங்கியதால் தியேட்டர்களை திறக்க தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் சுமார் 4 மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் இயங்க உள்ளன. ஊழியர்கள் தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டுடன் தியேட்டர்களில் இன்று முதல் திறக்கப்படுகின்றன. இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.