தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பு? அமைச்சர் கடம்பூர் ராஜு பதில்!

 

தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பு? அமைச்சர் கடம்பூர் ராஜு பதில்!

தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பது குறித்து செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு விளக்கமளித்துள்ளார்.

தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பு? அமைச்சர் கடம்பூர் ராஜு பதில்!

தமிழகத்தில் திரையரங்குகளை விரைவில் திறக்கவேண்டும் என்றும் திரைத்துறையினர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜு சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திரையரங்குகள் திறக்கப்படுவது குறித்து மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கவில்லை. தமிழகத்தில் திரையரங்குகளை திறப்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும். திரையரங்கு உரிமையாளர்கள் இன்று காலையில் என்னை நேரில் சந்தித்தனர். தியேட்டர்களை திறப்பது குறித்து மத்திய அரசின் வழிகாட்டுதல் ,மருத்துவ வல்லுநர் குழுவின் அறிவுறுத்தல் படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பு? அமைச்சர் கடம்பூர் ராஜு பதில்!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இருப்பினும் மேற்கு வங்காளத்தில் கொரோனா நெறிமுறை வழிகாட்டுதல்களுடன் திரையரங்குகள் வரும் அக். 1 ஆம் தேதி முதல் திறக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது .