வடகொரியா தயாரித்த உலகிலேயே மிகப்பெரிய ஏவுகணை

 

வடகொரியா தயாரித்த உலகிலேயே மிகப்பெரிய ஏவுகணை

வடகொரியா சமீபத்தில் ரானுவ அணிவகுப்பு நடத்தியது பற்றிதான் உலகெங்கும் பேச்சு. பல நாடுகளும் தங்கள் நாட்டின் ராணு வலிமையை உலகிற்கு காட்டுவதற்கு இம்மாதிரி நடத்துவது வழக்கம்தானே என்று தோன்றலாம். நிச்சயம் வித்தியாசம் இருக்கிறது.

எப்போதுமே மர்மங்கள் நிறைந்தது வட கொரியா. அந்நாட்டின் அதிபர் கிங் ஜன் உன் பற்றிய தவல்கள் பெரும்பாலும் வெளியே வராது. அவர் உயருடன் இல்லை என்றும்கூட செய்திகள் பரவின. பிறகு, அவர் அந்நாட்டின் வெள்ள சேதத்தைப் பார்வையிட வந்த படங்கள் வெளியாகின.

வடகொரியா தயாரித்த உலகிலேயே மிகப்பெரிய ஏவுகணை

வடகொரியாவில் நடத்தப்பட்ட ராணுவ அணிவகுப்பில் திரவப்பொருளால் இயங்குவதில் உலகிலேயே மிகப் பெரிய ஏவுகணை காட்சிப்படுத்தப் பட்டிருந்ததாம். இது பலருக்கு ஆச்சர்யத்தையும் திகைப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த ஏவுகணை கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து பேரழிகளை ஏற்படுத்தும் விதத்தில் இருப்பதாக வரும் செய்திகள் பலரையும் அச்சத்தில் ஆழ்த்துகின்றன. குறிப்பாக, அமெரிக்காவை. ஏனெனில், எப்போதுமே அமெரிக்காவும் வடகொரியாவும் எலியும் பூனைகளுமாக இருக்கக்கூடியவை.

வடகொரியா தயாரித்த உலகிலேயே மிகப்பெரிய ஏவுகணை

இந்த ராணுவ அணிவகுப்பு அவசரம் அவசரமாக இரவே நடத்தப்பட்டிருப்பது ஏன் என்று காரணம் புரியவில்லை. இன்னும் மூன்று வாரங்களில் அமெரிக்கத் தேர்தல் நடக்கவிருப்பதையும் வடகொரியா ராணுவ அணிவகுப்பு நடத்தியதையும் இணைத்து பல செய்திகள் வெளியாகின்றன. இந்த ராணுவ அணிவகுப்புக்கு வெளிநாட்டைச் சேர்ந்த எவரையுமே பார்வையாளராக அழைக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்படியெனில் என்னவோ திட்டம் வடகொரிய அதிபர் மனதில் இருக்கிறது என்பது மட்டும் உண்மை.

இந்த நிகழ்ச்சியில்தான், தங்கள் நாட்டில் கொரோனா தொற்று உடையவர்கள் யாருமில்லை. என்று தெரிவித்திருக்கிறார். உலகமே கொரோனா பிடியில் சிக்கியிருக்கும் நிலையில் இப்படியான அறிவிப்பு வியப்பை ஏற்படுத்துகிறது.