கொரோனா பாதிப்பில் இறந்த உலகின் முதல் நாய்!

 

கொரோனா பாதிப்பில் இறந்த உலகின் முதல் நாய்!

கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவில் தொடங்கிய கொரோனா நோய்த் தொற்று உலகை மிரட்டி வருகிறது. அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட வல்லரசு நாடுகளே கொரோனா மீட்பு பணிகளில் விழி பிதுங்கி நிற்கின்றன.

கொரோனா பாதிப்பில் இறந்த மனிதர்களைப் பற்றிய செய்திகள்தான் இதுவரை வந்திருந்தன. இப்போது முதல்முறையாக கொரோனா பாதிப்பில் இறந்த நாய் குறித்த செய்தி வந்திருக்கிறது.

அமெரிக்கா நாட்டின் நியூயார்க் நகரில் வசித்து வருபவர்கள் ராபர்ட் ம்- அலிசன் தம்பதியினர். இவர்கள் தங்கள் வீட்டில் ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் ஒன்றை வளர்த்து வந்தனர். அதன் வயது 7.

கொரோனா பாதிப்பில் இறந்த உலகின் முதல் நாய்!

சில மாதங்களுக்கு முன், அந்த நாய்க்கு கொரோனா பாதிப்பு இருக்கக்கூடும் என்ற சந்தேகம் வந்தது ராபர்ட்டுக்கு. சோதித்து அந்த நாயைப் பரிசோதனை செய்து பார்த்த கால்நடை மருத்துவர்களும் அந்நாய்க்கு கொரோனா இருக்கக்கூடும் என்றே நம்பினர்.  காரணம், அது மூச்சு விட கஷ்டப்பட்டது. எனவே, அந்த நாய்க்கு தொடர்ச்சியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

மனிதர்கள் கொரோனாவிலிருந்து நலம் பெற்றும் குணம் அடைவதைப் போல இந்த ஜெர்மன் ஷெப்பர்ட் நாயும் குணமாகி விடும் என்றே மருத்துவர்கள் உள்ளிட்ட பலரும் நம்பினர்.கொரோனா பாதிப்பில் இறந்த உலகின் முதல் நாய்!

ஆனால், இந்த நாய் கடந்த சில நாள்களுக்கு முன் சிகிச்சை பலன் இன்ரி இறந்தது. ஆயினும் இந்த நாய்க்கு புற்று நோயும் இருந்ததாகத் தெரிகிறது. ஒருவேளை அதனாலும் இறந்திருக்குக்கூடும் எனக் கருதுகிறார்கள்.

அமெரிக்காவில் நாய்கள், பூனைகள், புலி உள்ளிட்ட விலங்குகளுக்கும் கொரோனா பரவி வருவதால் அம்மக்கள் அச்சத்தில் உள்ளனர்.