உலகின் முதல் கொரோனா தடுப்பு ஊசி! நான்கு நாட்களில் பதிவு செய்கிறது ரஷ்யா

 

உலகின் முதல் கொரோனா தடுப்பு ஊசி! நான்கு நாட்களில் பதிவு செய்கிறது ரஷ்யா

2019 டிசம்பரில் தொடங்கிய கொரோனா நோய்த் தொற்று உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. நான்கு மாதங்களாக இந்தியாவின் தீராத பிரச்னை கொரோனா நோய்த் தொற்றுதா. நாள்தோறும் அதிகரித்து வருகிறதே தவிர குறைந்த பாடில்லை.

இன்றைய தேதி வரை கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க வில்லை என்பதே கவலை அளிக்கும் செய்தி.

உலகின் முதல் கொரோனா தடுப்பு ஊசி! நான்கு நாட்களில் பதிவு செய்கிறது ரஷ்யா

பல நாட்டு விஞ்ஞானிகள் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயன்று வருகின்றனர். பல கட்ட சோதனைகளில் தடுப்பு மருந்து பரிசோதிக்கப்பட்டு வருகிறது. விரைவில் நல்ல செய்தி கிடைக்கும் என எல்லோரும் நம்பிக்கொண்டிருந்தோம்.

இப்போது ரஷ்யாவிலிருந்து புது நம்பிக்கை வெளிச்சம் வீசும் அறிகுறி தென்பட்டிருக்கிறது.

ரஷ்யாவைச் சேர்ந்த கமலேயா ஆராய்ச்சி நிறுவனம் (Gamaleya Reserch Institue) தடுப்பூசியை மனிதர்களிடம் செலுத்தி வெற்றிகரமாக அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. விரைவில் இந்தத் தடுப்பூசியை பதிவு செய்ய விருக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகின் முதல் கொரோனா தடுப்பு ஊசி! நான்கு நாட்களில் பதிவு செய்கிறது ரஷ்யா

சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொரோனா தடுப்பு மருந்தைக் கண்டறியும் சோதனையில் இருக்கும்போது ரஷ்யாவின் இந்த முயற்சி ஆச்சர்யமாகப் பார்க்கப்படுகிறது.

ரஷ்ய அரசுத் தரப்பில் இது குறித்து தெரிவிக்கையில், ’ கமலேயா ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கிய கொரோனா தடுப்பு ஊசி ஆகஸ்ட் 12-ம் தேதி பதிவு செய்யப்பட விருக்கிறது. அக்டோபர் மாதம் முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக உற்பத்தி செய்ய இயலும் என எதிர்பார்க்கிறோம்.

தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்டமாகவும் இறுதி கட்டமாகவும் பரிசோதனை நடைபெற்றுவருகிறது. இதுவரை பிரச்னைகள் ஏதும் இல்லை. உலகிற்கு பாதுகாப்பான தடுப்பு மருந்தை அளிக்க வேண்டும் என்பதில் மிகுந்த கவனமாக இருக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளது.