’நோய்களை எதிர்கொள்ள பொது சுகாதாரத்தில் அதிக முதலீடு தேவை’ எச்சரிக்கும் உலக சுகாதார மையம்

’நோய்களை எதிர்கொள்ள பொது சுகாதாரத்தில் அதிக முதலீடு தேவை’ எச்சரிக்கும் உலக சுகாதார மையம்

கடந்த பத்து மாதங்களாக உலகத்தின் ஒரே பேசுபொருள் கொரோனா. ஆமாம்.  வேறெந்த பாதிப்பையும் விட பெருமளவு பாதிப்பை இந்த உலகில் நடத்தி வருகிறது கொரோனா வைரஸ்.

இன்றைய தேதியில் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 2 கோடியே 74 லட்சத்து  89 ஆயிரத்து 116 பேர்.   

’நோய்களை எதிர்கொள்ள பொது சுகாதாரத்தில் அதிக முதலீடு தேவை’ எச்சரிக்கும் உலக சுகாதார மையம்
கொரோனா வைரஸ்

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 1 கோடியே 95 லட்சத்து 90 ஆயிரத்து 209 நபர்கள். கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 8 லட்சத்து 96 ஆயிரத்து 865 பேர்.

உலகம் முழுவதும் ஒரு நோயால் 9 லட்சம் பேர் கொல்லப்படுவது என்பது சமீபத்தில் நடந்த தரவுகல் இல்லை.

கொரோனா வைரஸ் தொடர்பாக அவ்வப்போது உலகசுகாதார மையம் சில முன்னெச்சரிக்கைகளை அளித்தே வருகிறது. தற்போது கொரோனா தடுப்பூசியை உலகம் முழுவதும் பரவலாகக் கொண்டு சேர்ப்பதிலும் யுனிசெஃப்தான் முன் முயற்சிகளை எடுத்து வருகிறது.

’நோய்களை எதிர்கொள்ள பொது சுகாதாரத்தில் அதிக முதலீடு தேவை’ எச்சரிக்கும் உலக சுகாதார மையம்

உலக சுகாதார மையத்தின் தலைவர் டெட்ராஸ் ஆதனோம் சமீபத்தில் தெரிவித்த சில விஷயங்கள் அனைத்து நாடுகளும் கவனத்தோடு கேட்க வேண்டிய ஒன்று. அவர், கொரோனா நோய்த் தொற்றே முடிவான ஒன்றல்ல. அடுத்தடுத்து வரும் நோய்த் தொற்று இந்த உலகைத் தாக்கக்க்கூடும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், நோய்த் தொற்றுகளை எதிர்கொள்ள ஒவ்வொரு அரசும் பொதுசுகாதாரத்தில் அதிக முதலீடு செய்ய வேண்டியது அவசியம். அப்போதே அடுத்த பெருந்தொற்று வரும்போது சரியாக எதிர்கொள்ள முடியும் என்று அறிவுறுத்தியிருக்கிறார்.