உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு… சீறி பாயும் 783 காளைகள்!

 

உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு… சீறி பாயும் 783  காளைகள்!

பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.

உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு… சீறி பாயும் 783  காளைகள்!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையில் இரண்டாம் நாளான இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. உழவுக்கு பெரிதும் உதவும் மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவற்றை அலங்கரித்து பொங்கல் படைத்து மக்கள் வழிபடுவர். அதேசமயம் பொங்கல் பண்டிகை என்றாலே பெரிதும் பேசப்படக்கூடிய ஜல்லிக்கட்டு போட்டியும் நேற்றுமுதல் வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு… சீறி பாயும் 783  காளைகள்!

இந்நிலையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது . காலை 8 மணிக்கு தொடங்கும் பாலமேடு ஜல்லிக்கட்டு மாலை 4 மணிவரை நடைபெறவுள்ளது. போட்டியில் 783 காளைகள், 651 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கின்றனர். ஜல்லிக்கட்டில் வெல்லும் வீரர்கள் ,காளைகளுக்கு டிவி, பிரிட்ஜ், சைக்கிள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படும். சிறந்த காளை உரிமையாளருக்கு காங்கேயம் பசு மாடும் ,சிறந்த மாடுபிடி வீரருக்கு காரும் பரிசாக வழங்கப்படும். கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன், பல்வேறு கட்டுப்பாடுகளுடன், ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. உடல் பரிசோதனை செய்யப்பட்டு, தனிமனித இடைவெளியுடன் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர். ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்கள் காளைகளின் உரிமையாளர்கள், பார்வையாளர்களுக்கு மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தென்மண்டல ஐஜி முருகன் தலைமையில் சுமார் 2,000ற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.