வேகமெடுக்கும் ராமர் கோயில் கட்டுமான பணிகள்… பணிமனையிலிருந்து கட்டுமான பகுதிக்கு மாற்றப்படும் செதுக்கப்பட்ட கற்கள்

வேகமெடுக்கும் ராமர் கோயில் கட்டுமான பணிகள்… பணிமனையிலிருந்து கட்டுமான பகுதிக்கு மாற்றப்படும் செதுக்கப்பட்ட கற்கள்

அயோத்தியில் ராமர் கோயிலுக்கான கட்டுமான பணிகள் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. பணிமனையிலிருந்து கட்டுமான பகுதிக்கு செதுக்கப்பட்ட கற்கள் மாற்றும் பணிகள் தொடங்கி விட்டது.

பல பத்து ஆண்டுகளாக முடிவுக்கு வராமல் இருந்த ராம ஜென்மபூமி-பாபர் மசூதி வழக்கில் கடந்த ஆண்டு நவம்பர் 9ம் தேதியன்று வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியது. சர்ச்சைக்குரிய நிலத்தில் இந்துக்கள் கோயில் கட்டி கொள்ளலாம். அதேசமயம் வேறு பகுதியில் மசூதி கட்டி கொள்ள முஸ்லிம் சமுதாயத்தினர் விரும்பும் இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை அரசு வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தது.

வேகமெடுக்கும் ராமர் கோயில் கட்டுமான பணிகள்… பணிமனையிலிருந்து கட்டுமான பகுதிக்கு மாற்றப்படும் செதுக்கப்பட்ட கற்கள்
கட்டுமான பணிக்கு எடுத்துச்செல்லப்படும் செதுக்கப்பட்ட கற்கள்

இதனையடுத்து பிரம்மாண்டமாக உருவாக உள்ள ராமர் கோயிலின் கட்டுமான பணிகளுக்காக ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அமைக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி ராம ஜென்மபூமியில் நடைபெற்ற ராமர் கோயில் கட்டுமான பணிக்கான பூமி பூஜையில் கலந்து கொண்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதனைதொடர்ந்து ராமர் கோயில் கட்டுமான பணிகள் தொடங்கியது. ராமர் கோயில் கட்டுமானத்துக்காக பல ஆண்டுகளாக கற்கள் செதுக்கப்பட்டு ஒரு இடத்தில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை தற்போது கட்டுமான பகுதிக்கு மாற்றும் பணிகள் தொடங்கியுள்ளன.

வேகமெடுக்கும் ராமர் கோயில் கட்டுமான பணிகள்… பணிமனையிலிருந்து கட்டுமான பகுதிக்கு மாற்றப்படும் செதுக்கப்பட்ட கற்கள்
ராமர் கோயில் மாதிரி

பணிமனையிலிருந்து செதுக்கப்பட்ட கற்களை ராமர் கோயில் கட்டுமான பகுதிக்கு மாற்றுவதற்கு முன்னதாக அந்த கற்களுக்கு பூசாரிகள் பூஜைகள் மேற்கொண்டனர். இது தொடர்பாக ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை டிவிட்டரில், ஜெய் ஸ்ரீ ராம்! பணிமனையிலிருந்து கோயில் பகுதிக்கு செதுக்கப்பட்ட கற்களை மாற்றும் பணிகள் தொடங்கப்பட்டது. ஸ்ரீ ராம்ஜென்மபூமி கோயில் கட்டுமான பணிக்கு அந்த கற்கள் பயன்படுத்தப்படும் என பதிவு செய்து இருந்தது. ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை கடந்த ஆகஸ்ட் 29ம் தேதியன்று ராமர் கோயில் லே அவுட் மற்றும் இதர ஆவணங்களை அயோத்தி மேம்பாட்டு ஆணையத்திடம் சமர்பித்தது. அந்த ஆணையம் கடந்த செப்டம்பரில் ராமர் கோயில் லே அவுட்டுக்கு ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.