நடுரோட்டில் நெல்குத்திய பெண்கள்…தூத்துக்குடி பரபரப்பு

 

நடுரோட்டில் நெல்குத்திய பெண்கள்…தூத்துக்குடி பரபரப்பு

15 ஆண்டுகளாக போராடியும் பலமுறை மனு கொடுத்தும் பலனில்லாததால் தூத்துக்குடி மாநகராட்சியை கண்டித்து நூதன போராட்டம் நடத்தியுள்ளனர் பி.என்.டி. காலனி பகுதி மக்கள்.

நடுரோட்டில் நெல்குத்திய பெண்கள்…தூத்துக்குடி பரபரப்பு

இந்த பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக சாலை வசதி அமைத்து தராமல் இருப்பதோடு வடிகால் வசதியும் அமைத்து தராமல் இருந்து வருகிறது தூத்துக்குடி மாநகராட்சி. இதனால் பருவமழை காலங்களில் மழை வெள்ளம் சூழ்ந்து மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் இருக்கிறது.

மாநகராட்சி நிர்வாகம் இதற்கு ஒரு வழி அமைத்து தரவேண்டும் என்று 15 ஆண்டுகளாக போராடியும் பலன் இல்லாததால், பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் திரண்டனர். இவர்களுக்கு ஆதரவாக மாதர் சங்கத்தினரும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும் நின்றனர்.

பி.என்.டி. காலனின் பகுதியில் சேதமடைந்த சாலைகளில் நெல் கொட்டி , நெல் குத்தும் போராட்டம் நடத்தினர். ஏராளமான பெண்கள் நெல் குத்தி மாநகராட்சிக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.

இந்த போராட்டம் குறித்து செய்தி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பரவி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.